குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொட்டிக்கொடுப்பார் குரு பகவான்

Guru Peyarchi: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2024, 09:59 PM IST
  • குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்கள் கிடைக்க உள்ளன.
  • இந்த காலத்தில் உங்கள் அதிர்ஷ்டம் அதிகமாகும்.
  • பல நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது நடந்து முடியும்.
குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொட்டிக்கொடுப்பார் குரு பகவான்

Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. தேவர்களின் குருவாக கருதப்படும் பிரகஸ்பதி சுபமான கிரகமாக உள்ளார். அனைத்து  கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பயிற்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.

Add Zee News as a Preferred Source

குருபகவான் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். ஆகையால் அவர் அதே ராசிக்கு அடுத்த முறை வர சுமார் 12 ஆண்டுகளை எடுத்துக் கொள்வார். தற்போது குரு அவருடைய சொந்த ராசியான மேஷ ராசியில் உள்ளார். மே ஒன்றாம் தேதி குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். 

ரிஷபம் சுக்கிரனின் ராசியாகும். சுக்கிரனின் ராசியில் குரு பெயர்ச்சி (Guru Peyarchi) ஆவது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். காரியங்கள் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs)பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

குரு மேஷத்தில் இருந்து விலகி ரிஷபத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான வெற்றிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். இதனுடன் நீண்ட நாட்களாக குழந்தைக்கான ஏக்கத்துடன் இருப்பவர்களுக்கு இப்பொழுது குழந்தை செல்வம் பிறக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை இடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உங்கள் பணியில் நீங்கள் காட்டும் திறன் காரணமாக உங்களுக்கு உதவி உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் சுபமான பலன்களை அனுபவிக்கும் ராசிகள்! சிலருக்கு சிக்கலும் உண்டு!

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலவித நற்பல நற்பலன்களை அள்ளித் தரும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த வேலைகள் இப்போது நடந்து முடியும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகமாகும். பண வரவிற்கான புதிய வழிகள் திறக்கும். நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு இருந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு திருமணம் நடக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கடகம் (Cancer)

குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்கள் கிடைக்க உள்ளன. இந்த காலத்தில் உங்கள் அதிர்ஷ்டம் அதிகமாகும். பல நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது நடந்து முடியும். உங்கள் வாழ்வில் இருந்த தடைகள் அத்தனையும் நீங்கும். மேல் படிப்பு படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் இப்போது அதை வெற்றிகரமாக படித்து முடிப்பார்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் சகோதர சகோதரிகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வந்த மன வருத்தம் சரியாகும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் உறவு மேம்படும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருந்து வந்த சோர்வு இப்பொழுது சரியாகும். குழந்தைகள் மூலமாக மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்னும் சில நாட்களில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்: உதயமாகி உச்சம் தொடவைப்பார் சனி பகவான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News