இன்னும் சில நாட்களில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்: உதயமாகி உச்சம் தொடவைப்பார் சனி பகவான்

Shani Uday: சனி பகவானின் உதயம் ராசிகளுக்கு நிவாரணத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். குறிப்பாக சில ராசிகளுக்கு சனி உதயத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2024, 05:41 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் ஆக்கப்பூர்வமான பல நன்மைகளை அள்ளித் தரும்.
  • வேலை தேடிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும்.
  • ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு இப்போது புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
இன்னும் சில நாட்களில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்: உதயமாகி உச்சம் தொடவைப்பார் சனி பகவான்

Shani Uday: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகளை தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் முக்கியமான கிராமமாக பார்க்கப்படுகிறார். அவரது சிறிய மாற்றமும் பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சனி பகவான் ஒரே ராசியில் அதிக காலத்திற்கு இருப்பதால் அவருடைய தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கிறது.

பொதுவாக கிரகங்கள் சூரியனின் அருகில் வரும் போது அஸ்தமிக்கின்றன. அதன் பிறகு சூரியனை விட்டு விலகிச் செல்லும் போது உதயம் ஆகின்றன. ஒரு கிரகம் அஸ்தமன நிலையில் இருந்தால் அது ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுபமாக கருதப்படுகின்றது. ஏன் என்றால் இந்த நிலையில் கிரகங்களின் ஆற்றல் குறைந்து விடுகின்றன. ஆகையால் அவை அசுப பலன்களை தருகின்றன. தற்போது நீதியின் கடவுளான சனி பகவான் அஸ்தமன நிலையில் உள்ளார். மார்ச் 18 ஆம் தேதி வரை அவர் இந்த நிலையில் இருப்பார். அதன் பிறகு சனி பகவான் உதயம் ஆவார்.

2024 ஆம் ஆண்டு 18 மார்ச் அன்று சனி உதயம் நடக்க இருக்கின்றது. சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி பகவான் தன்னுடைய சொந்த ராசியான கும்பத்தில் உதயமாக உள்ளார். இது தனி சிறப்பம்சம் வாய்ந்தது. சனி பகவானின் உதயம் ராசிகளுக்கு நிவாரணத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். குறிப்பாக சில ராசிகளுக்கு சனி உதயத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்கள் பல வெற்றிகளை பெறுவார்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சனி உதயத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகள்.

ரிஷபம் (Taurus)

சனியின் உதயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். இவர்களது பணியிடத்தில் இவர்கள் நிலை முன்னேற்றம் காணும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இவர்களுடைய பணியால் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள். இதனால் இவர்களுக்கு அநுகூலமான நன்மைகள் கிடைக்கும். விடாமுயற்சியின் பலன் இப்போது தெரியும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான லாபம் இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்... அருள் மழை பொழிவார் சனி

துலாம் (Libra)

சனியின் உதயத்தால் துலா ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்க உள்ளன. முன்னேற்றத்திற்கான வழி திறக்கிறது. வாழ்க்கையில் முன்னேறி உங்கள் கனவுகளை நிஜமாக்குவீர்கள். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இதனால் அபரிமிதமான லாபம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கும்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் ஆக்கப்பூர்வமான பல நன்மைகளை அள்ளித் தரும். வேலை தேடிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு இப்போது புதிய பொறுப்புகள் கிடைக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகமாகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.வாழ்க்கையில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க |  30 ஆண்டுக்கு பின் கும்பத்தில் சனி அஸ்தமனம்.. எந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News