இன்னும் 8 நாட்களில சுக்கிர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல காலம், பணம், பதவி

Venus in Leo July 2024 Horoscope: இந்த மாத இறுதியில் செல்வத்தை வாரி அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் இரண்டாவது முறையாக பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2024, 04:51 PM IST
  • வருமானம் உயரலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • நிதி நிலை மோசமடையும். மனைவியுடன் தவறான புரிதல் ஏற்படும்.
இன்னும் 8 நாட்களில சுக்கிர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல காலம், பணம், பதவி title=

Venus in Leo July 2024 Horoscope: ஜோதிடத்தின் படி, சுக்கிரன் மிகவும் சுப கிரகமாகும். அதனுடன் இந்த கிரகம் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, போன்ற வரத்தை அள்ளித் தரும் கிரகமாகும். சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களிலும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார் சுக்கிரன்.

அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் செல்வத்தை வாரி அள்ளித் தரும் சுக்கிரன் பகவான் இரண்டாவது முறையாக பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சுப நிகழ்வானது ஜூலை 31, 2024 அன்று, நடக்க உள்ளது. மதியம் 2:15 மணிக்கு சிம்மத்தில் பெயர்ச்சி அடைவார். இதனால் 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும் எந்த ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம். 

மேஷம்: சுக்கிர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும். வருமானம் உயரலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | இன்னும் 30 நாட்களில் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு பாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் நேரிடும். நிதி நிலை மோசமடையலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வேலையில் பண வரவு இருக்கும். இதனால் பொருளாதார நிலை சிறப்பாகும். பண வரவு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சுப பலன்களை தரும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். 

சிம்மம்: சுக்கிரனின் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலையில் சாதகமான பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கன்னி: சுக்கிரனின் பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு மங்களகரமான பலனைத் தரும். தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகளை பெற்று தொழிலை விரிவுப்படுத்தலாம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். 

துலாம்: சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவை ஏற்படுத்தி தரும். வியாபாரத்தை விரிவுப் படுத்தலாம். நிதி ஆதாயம் உண்டாகும். கனவுகள் அனைத்தும் நிறைவேறும். அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்: சுக்கிர பெயர்ச்சிக்குப் பிறகு விருச்சிக ராசிக்காரர்கள் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். சில சவால்கள் உங்களை தாக்கும். பொருளாதார நிலை சுமராகவே இருக்கும். ஈகோவால் காதல் வாழ்க்கையில் விரிசல் ஏற்படலாம். 

தனுசு: சுக்கிரன் தனது ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை தரும். தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும் அலுவலக பணியில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை மோசமடையும். மனைவியுடன் தவறான புரிதல் ஏற்படும். 

மகரம்: சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தை தரும். பல வாய்ப்புகளை பெறலாம். பணிச்சுமை அதிகரிக்கலாம், புதிய நபர்களை சந்திப்பீர்கள். அதிகச் செலவுகளால் நிம்மதியின்மை ஏற்படும். உடல்நலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

கும்பம்: சுக்கிரன் பெயர்ச்சிக்குப் பிறகு கும்ப ராசிக்காரர்களுக்கு தாமத்திய உறவில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் விரிவடையும். 

மீனம்: சுக்கிரனின் பெயர்ச்சி மீன ராசியினருக்கு பல எதிர்பாராத வாய்ப்புகளை வழங்கும். தொழிலில் பெரிய அளவில் வெற்றியைப் பெறலாம். அதிக செலவுகள் காரணமாக மனம் குழப்பமடையலாம். உடல்நலம் கவலையடையலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி சந்திர கிரகணத்தால் மோசமாய் பாதிக்கப்படும் 4 ராசிகளுக்கு சனி பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News