ராம நவமி.... ஸ்ரீராமனின் ஆசியை பரிபூரணமாக பெறும் ‘5’ ராசிகள்!

ராம நவமி 2024: ராம நவமியில் அரிய மற்றும் மங்களகரமான கிரகங்களின் சேர்க்கை காரணமாக 5 ராசிக்காரர்கள் ஸ்ரீராமனின் அருளை பரிபூரணமாக பெற்று, வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அடைவார்கள்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2024, 08:45 PM IST
ராம நவமி.... ஸ்ரீராமனின் ஆசியை பரிபூரணமாக பெறும் ‘5’ ராசிகள்! title=

ஸ்ரீராம நவமி தினத்தன்று சுப யோகம் உருவாகிறது. ராம நவமி அன்று கஜகேசரி யோகம் கூடி வரப் போகிறது. இந்த யோகம் பகவான் ராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகத்திலும் உள்ளது என கூறப்படுகிறது. இந்த முறை ராம நவமியில் பல அரிய சேர்க்கைகள் நடைபெற உள்ளன. கிரகங்களின் அசுப தாக்கத்தால், இந்த முறை 5 ராசிக்காரர்களுக்கு ராமர் விசேஷமாக அருள்பாலிக்க உள்ளார். ராம நவமியில் எந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும் என்பதையும்,  வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அடைவார்கள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

பகவான் ஸ்ரீராமர் கடக ராசியில் பிறந்தார். இந்த முறை ராமநவமி அன்று, ராம்சந்திரஜி பிறந்த மதியம் அபிஜீத் முஹூர்த்தத்தில், ராமரின் ஜாதகத்திலும் இருக்கும் கஜகேசரி யோகமும் உருவாகிறது. ராமரின் ஜாதகத்தில் சூரியன் பத்தாம் வீட்டில் அமர்ந்து உச்ச நிலையில் இருக்கிறார். இம்முறையும் ராம நவமி அன்று சூரியன் தனது உச்ச ராசியான மேஷ ராசியில் இருந்து மதியம் பத்தாம் வீட்டில் அமர்கிறார். ராமரின் ஜாதகத்தில் சுக்கிரன் அதிர்ஷ்ட வீட்டில் உச்சமாக இருக்கிறார். இந்த முறை ராம நவமி அன்றும் இந்த அரிய கலவை உருவாகியுள்ளது. நிலையில், இந்த முறை ராமநவமியில், மதியம் முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு சில சிறப்புகள் இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.  மேலும் கடகம் உள்ளிட்ட 5 ராசிகளில் ராமர் பல சிறப்புக்களை அருள்வார்.

மேஷம்: 

பகவான் ஸ்ரீராமர் அருளால் மேஷ ராசிக்காரர்கள் சில நாட்களாக சந்தித்து வந்த பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மூதாதையர் சொத்து கிடைத்து மகிழ்ச்சியையும் பெறலாம். அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில், வேலை செய்பவர்களுக்கு பதவி, கௌரவம் போன்ற பலன்களும் கிடைக்கும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும் ராமரின் அருளால் தீரும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் உண்டாகும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவும் முன்பை விட இனிமையாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஸ்ரீராமரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பகவான் ராமரின் ஆசியுடன், உங்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், இந்த காலகட்டத்தில், எதிர்காலத்தில் உங்களுக்கு நிதி நன்மைகளை கொண்டு வரும் ஒருவரை நீங்கள் சந்திக்கலாம். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். மேலும், உங்கள் குடும்ப வாழ்க்கையும் முன்பை விட சிறப்பாக இருக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். இதனுடன் சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் உண்டாகும். 

மேலும் படிக்க | ஏப்ரல் மாத பெயர்ச்சிகளால்.... இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!

துலாம் 

ராமர் அருளால் துலாம் ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் இனிதே நிறைவேறும். வாகனம் அல்லது சொத்து வாங்கும் கனவில் இருந்திருந்தால், அது இந்த காலகட்டத்தில் நிறைவேறும். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்கள் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுபவருக்கு பண உதவி செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏழை மக்களுக்கு உதவுங்கள். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். 

மகரம்.

மகர ராசிக்காரர்கள் ஸ்ரீராமரின் ஆசீர்வாதத்துடன் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுபடுவார்கள். நீங்கள் அன்பானவரை சந்திக்கலாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக சந்திக்காத ஒருவரை சந்திக்கலாம். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில், உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து பரிசு மற்றும் மரியாதை இரண்டையும் பெறுவீர்கள். மேலும் உங்கள் செல்வம் பெருகும். ஆன்மீக பயணமும் மேற்கொள்ளலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ஸ்ரீராமரின் ஆசீர்வாதத்துடன் தங்கள் தொழிலில் நல்ல மற்றும் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். தாஉங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்திலும் சுபிட்சம் இருக்கும். பழைய கடன்களிலிருந்தும் விடுபடுவீர்கள். முதலீடு செய்வதற்கு நேரம் மிகவும் நல்லது. இந்தக் காலத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன்தான் கிடைக்கும். அதுமட்டுமின்றி உங்கள் குடும்பச் சண்டைகள் அனைத்தும் தீரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News