உதயமாகும் சனி... இந்த ராசிகளுக்கு பங்குனியில் இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது!

Lucky zodiacs of Saturn Rise: சனி உதய பலன்கள் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் நீதி கடவுளான சனீஸ்வரன், மிகவும் மெதுவாக நகரும் கிரகம். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டு காலம் பிடிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2024, 08:27 PM IST
  • சனிப்பெயர்ச்சியை போலவே, சனியின் அஸ்தமனம், சனியின் உதயம் ஆகியவையும், வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • ஆண்டியையும் அரசனாகும் வல்லமை படைத்த சனி பகவான்.
  • சனி கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி, கும்ப ராசியில் அஸ்தமனம் ஆனார்.
உதயமாகும் சனி... இந்த ராசிகளுக்கு பங்குனியில் இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது! title=

சனி உதய பலன்கள்: சனியின் அருள் பார்வை இருந்தால் போதும். ஆண்டியும் அரசன் ஆவான். தற்போது கும்ப ராசியில் சனிபகவான் வீற்றிருக்கும் நிலையில், 2024 மார்ச் 18 ஆம் தேதி, சனீஸ்வரன் கும்பத்தில் உதயமாகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் நீதி கடவுளான சனீஸ்வரன், மிகவும் மெதுவாக நகரும் கிரகம். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டு காலம் பிடிக்கும்.

சனி அஸ்தமனம்

ஆண்டியையும் அரசனாகும் வல்லமை படைத்த சனி பகவான், கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி, கும்ப ராசியில் அஸ்தமனம் ஆனார். சனிப்பெயர்ச்சியை போலவே, சனியின் அஸ்தமனம், சனியின் உதயம் ஆகியவையும், வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

சனி உதயம்

சனி உதயம் கடந்த 2024 பிப்ரவரி 11ஆம் தேதி அஸ்தமமான சனி பகவான், 2024 மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி காலை 7.49 மணிக்கு உதயமாவார். இதனால் சில ராசிகள், வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கையை தொடங்குவார்கள்.

மேஷ ராசி

மேஷ ராசியினரின் ஜாதகத்தின் 11 ஆம் வீட்டில் சனிபகவான் உதயமாகும் நிலையில், மன அழுத்தங்கள் நீங்கி, பிரச்சினைகள் அனைத்தும் மேகம் போல் விலகி கடின உழைப்புக்கான முழுமையான பலன் கிடைக்கும். முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும், நீங்கள் நினைத்தபடி சிறப்பாக நிறைவேறும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள் சனிபகவானின் உதயத்தால், பதவி உயர்வையும் கௌரவத்தையும் பெறுவார்கள். நீண்ட கால நோயிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குவீர்கள். வேலையில் தொழிலில் உச்சத்திற்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வு திருப்திகரமான வகையில் இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். 

மிதுன ராசி

மிதுன ராசியினரின் ஒன்பதாம் வீட்டில் சனீஸ்வரன் உதயம் ஆகும் நிலையில், உங்கள் கடின உழைப்பிற்கான முழுமையான பலன்கள் கிடைக்கும். நீங்கள் சந்திக்கும் புதிய நபர்கள் மூலம், வருமான வாய்ப்புகள் பெருகும். தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தும் நிறைவேறும். உங்களை வாட்டி வந்த உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

மேலும் படிக்க | அன்னை மகாலட்சுமிக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்: இவர்களுக்கு எல்லாம் கிடைக்கும், எப்போதும் கிடைக்கும் - உங்களுக்கு எந்த ராசி?

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால், வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி, நல்ல காலம் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடிக் கொண்டிருப்பவர் என்றால், வேலை வாய்ப்பு உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். 

மீன ராசி

மீன ராசியினருக்கு சனியின் உதயம் காரணமாக எதிர்பாராத பண வரவு இருக்கும். இதனால் நிதி நிலைமை மேம்படும். உறவுகள் நெருக்கமாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் வரும். சேமிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆடம்பரத்திற்காக செலவு செய்து வாழ்க்கையை வசதியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Maasi Magam: முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் கிடைத்த நாள்! மாசி மகத்தின் பெருமை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News