புதன் வக்ர பெயர்ச்சி: இன்னும் 2 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜயோகம்

Budhan Vakra Peyarchi: புதன் வக்ர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் லாபகரமா பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 7, 2024, 02:43 PM IST
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • வியாபாரத்தில் விருத்தி ஏற்படும்.
  • குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.
புதன் வக்ர பெயர்ச்சி: இன்னும் 2 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜயோகம் title=

Budhan Vakra Peyarchi Palangal 2024: ஜோதிடத்தில் ராசி மாற்றம், வக்ர பெயர்ச்சி மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். ஏனெனில் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படும். அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. ராசி மாற்றத்தை தவிர நட்சத்திர மாற்றம், உதயம், அஸ்தமனம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுத்தும். இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும், உலகிலும் காணப்படும். 

இந்நிலையில் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணியான புதன் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைப் போகிறார். புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சியால் லாபகரமான பலன் கிடைக்கும். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். 

ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ளலாம். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும் கிடைக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

மேலும் படிக்க | Surya grahan 2024: 54 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் முழு சூரிய கிரகணம்.. இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாக மாறும்

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு ஏற்படலாம். நிதி நிலை மேம்படும். தடைப்பட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெறும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். 

சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவு அதிகமாகலாம். நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.

துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். கடன் சுமை குறையும். உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும். இதுவரை இருந்த நோயில்இருந்து ஒருவழியாக குணமடைவீர்கள். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். 

தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்களாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகள் கூடலாம். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். 

கும்பம் (Aquarius Zodiac Sign): புதனின் வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை தரும். பண வரவு உண்டாகும். வீடு, வாகனம் யோகம் உண்டாகும். தொழிலை விரிவுப்படுத்தலாம். பொறுமையுடனும் முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | sani peyarchi natchathira palangal 2024: சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 181 நாட்கள் இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News