ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம் பாலைவனத்தில் கூட வளரக்கூடியது. மிகவும் வசீகரமான மரமாக இருக்கும் இதில் இலைகள் முதல் அனைத்து பாகங்களுமே சிறப்பு வாய்ந்தது. சிவாலயங்களில் தல விருட்சமாக இருக்கும் வன்னி மரம் தெய்வீக தன்மைகள் நிறைந்தது. வன்னி மர இலை தங்கத்துக்கு நிகரானது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
சனி தேவரின் அருளை பரிமாணமாக பெற
வன்னி மரத்தை வணங்கி வழிபட்டால், சனி தேவரின் அருளை பரிமாணமாக பெறலாம். ஏழரை நாட்டு சனி மற்றும் சனி மகா திசையால் பாதிக்கப்பட்டவர்கள், வன்னி மர செடியை நட்டு வழிபடுவதால், மலைபோல் வந்த பிரச்சனைகள் பணி போல் நீங்கும். கைவைத்த காரியம் அனைத்திலும் அனைத்திலும் வெற்றியை குவிக்கலாம். வன்னி மரச்செடியை பூஜிப்பதன் மூலம், சனிபகவானின் (Lord Shani) அருளை பரிபூரணமாக பெறலாம்.
எதிர்மறை ஆற்றலை நிர்மூலமாக்கும் சக்தி
வீட்டில் வன்னி மர செடியை நட்டு வழிபடுவதன் மூலம், செல்வ வளம் அபரிமிதமாக இருக்கும். துளசியைப் போலவே எதிர்மறை ஆற்றலை நிர்மூலமாக்கும் சக்தி வன்னி மர செடிக்கு உண்டு. வீட்டில் அமைதி சந்தோஷம், நிம்மதி ஆகியவை நீடித்திருக்கும். கடன் தொல்லை, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ஆகிய அனைத்திலிருந்தும் விடுபட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ, வன்னி மர செடியை வீட்டில் வைத்து வணங்கி வருவது நல்லது.
காற்றினை சுத்தப்படுத்தும் திறன் வன்னி மரம்
வெற்றிகளை அள்ளித் தரும் ஆற்றல் கொண்ட வன்னி மரத்திற்கு, எண்ணற்ற மருத்துவ குணங்களும் உண்டு. சித்த மருத்துவத்தில் முக்கியமாக பயன்படுத்தப்படும், வன்னி மர பட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. மேலும் வன்னி மரத்திலிருந்து வரும் காற்றை சுவாசிப்பதன் மூலம், சுவாசக் கோளாறுகளில் இருந்து, விடுதலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. காற்றினை சுத்தப்படுத்தும் திறன் இதற்கு உள்ளதால், சுவாச கோளாறுகளுக்கு மருந்தாகிறது.
மேலும் படிக்க | மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள், குபேர யோகம் ஆரம்பம்
வெற்றியை கொடுக்கும் ஆற்றல் உள்ள வன்னி மரம்
புராணத்தில் பல இடங்களில், வன்னிமரச் செடியின் மகத்துவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமபிரான், ராவணனை வதம் செய்ய போர் தொடுப்பதற்கு முன்பாக, வன்னி மர செடியை, வணங்கிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. வன்னி மரத்திற்கு வெற்றியை கொடுக்கும் ஆற்றல் உள்ளதால், ஸ்ரீராமர் வன்னி மரத்தை பூஜித்துள்ளார்.
சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் வன்னி
மகாபாரதத்திலும், வன்னி மர செடி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்கள், அனைத்தையும் துறந்து அஞ்ஞானவாசம் மேற்கொள்வதற்கு முன்னதாக, தங்களிடமிருந்த ஆயுதங்கள், ஆடை அணிகலன்கள், ஆகிய அனைத்தையும் ஒரு துணியில் வைத்து கட்டி, வன்னி மரத்தடியில் வைத்து சென்றதாக கூறப்பட்டுள்ளது. வன்னி மரம் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்பதால், அவர்கள் வைத்த பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | புதன் அஸ்தமனம் ... வேலையில், தொழிலில் சிக்கல்களை எதிர்கொள்ளும் 6 ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ