2023 புத்தாண்டில் தொட்டதெல்லாம் துலங்கப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

Lucky Zodiac 2023: கோதிட கணக்கீடுகளின் படி, 2023 ஆம் ஆண்டில், மூன்று ராசிகளுக்கு நல்ல நேரம் வரப்போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் தரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2022, 05:15 PM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் இந்த வருடம் முடிவடையும்.
  • வரும் புத்தாண்டில் உங்கள் தொழிலில் பல வாய்ப்புகளை காண்பீர்கள்.
  • இந்த ஆண்டு புதிய சவால்களை மிக எளிதாக எதிர்கொள்வீர்கள்.
2023 புத்தாண்டில் தொட்டதெல்லாம் துலங்கப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான் title=

புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2023 ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம். பிறக்கவிருக்கும் புத்தாண்டு நமக்கு எப்படி இருக்கும்? வாழ்க்கையில் எந்த அளவு முன்னேற்றம் இருக்கும்? குழந்தைகளின் படிப்பு, திருமணம், பதவி உயர்வு, வணிகம் என வாழ்வின் அனைத்து அம்சங்களும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

கோதிட கணக்கீடுகளின் படி, 2023 ஆம் ஆண்டில், மூன்று ராசிகளுக்கு நல்ல நேரம் வரப்போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் தரும். இவர்களுக்கு கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை மற்றும் கிரகங்களின் சஞ்சாரம் ஆகியவை சுப பலன்களைத் தரும்.

ஜோதிட சாஸ்திரப்படி, 2023-ம் ஆண்டின் துவக்கத்திலேயே சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கமும், சில ராசிகளுக்கு சனி தசையின் தாக்கமும் தொடங்கும். இருப்பினும், கிரகங்களின் தாக்கத்தாலும், சுப யோகத்தாலும் சில ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியை பரிசாக தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

புத்தாண்டில் மகிழ்ச்சி மழையில் நனையவுள்ள ராசிகள்:

மிதுனம்

2023 ஆம் ஆண்டு முழுவதுமே மிதுன ராசிக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். 2023 ஆம் ஆண்டில், இவர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை பெறுவார்கள். இந்த ஆண்டு உங்கள் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். 2023 வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த ஆண்டு உங்கள் அறிவாற்றலை சரியாக பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

வரும் ஆண்டு உங்களுக்கு பல நல்ல பலன்களைத் தரும். உடல்நலக் குறைபாடுகள் குறையும். வாழ்க்கையில் துறைகளில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். இந்த ஆண்டு, உங்கள் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்துமுடியும். இதன் காரணமாக உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறன் வலுவாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு நீண்ட தூரப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்கும். அது உங்களுக்கு நன்மை பயக்கும். வேலை மாறுவதற்கு இந்த வருடம் நல்லது.

மேலும் படிக்க | குரு வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகத்தால் செல்வம் பெருகும் 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் இந்த வருடம் முடிவடையும். வரும் புத்தாண்டில் உங்கள் தொழிலில் பல வாய்ப்புகளை காண்பீர்கள். இந்த ஆண்டு புதிய சவால்களை மிக எளிதாக எதிர்கொள்வீர்கள். முற்றிலும் புதிய வாய்ப்புகளையும் வெற்றிகளையும் சந்திப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். துலாம் ராசிக்காரர்கள் இந்த வருடம் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். 2023ல் அபரிமிதமான முன்னேற்றம் காண்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நடந்து கொண்டிருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் வெளிநாட்டுப் பயணத்திற்கான வாய்ப்புகளும் இந்த ஆண்டு அமையும். வாழ்க்கையில் பல வழிகளில் முக்கியமான மாற்றங்களை உணர்வீர்கள். இந்த ஆண்டு உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமான வழிகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஒவ்வொன்றையும் முழுமையாகப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். 2023 உங்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். தொழில் ரீதியாகவும், புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். வேலை தெடுபவர்களுக்கு இந்த வருடம் புதிய வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க முழு வாய்ப்புகள் உள்ளன.

வணிகத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு நன்றாக இருக்கும். தனிமையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு துணையை பெறலாம். உங்கள் காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் வேலையில் ஏற்றம் அடைவீர்கள். இந்த ஆண்டு பல ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் புதிய புத்துணர்ச்சியையும் புதுமையையும் உணர்வீர்கள். ஒட்டுமொத்தமாக, 2023 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் புதிய ஆற்றலைக் கொண்டுவரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2023 புத்தாண்டின் முதல் பெயர்ச்சி! புதனின் வக்ரப் பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு நன்மை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News