2023 புத்தாண்டின் முதல் பெயர்ச்சி! புதனின் வக்ரப் பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு நன்மை

Mercury Transit 2023: புத்தாண்டில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் வக்ர சஞ்சாரத்தால் சிலருக்கு நன்மைகள் என்றால், சிலருக்கு நேரம் மோசமாகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2022, 10:21 PM IST
  • புத்தாண்டின் முதல் கிரக பெயர்ச்சி
  • புதனின் வக்ர பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்
  • புத்தாண்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் வக்ர சஞ்சாரம்
2023 புத்தாண்டின் முதல் பெயர்ச்சி! புதனின் வக்ரப் பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு நன்மை title=

2023ஆம் ஆண்டின் முதல் பெயர்ச்சியாக புதன் கிரகம், வக்ர பெயர்ச்சியாக தனுசு ராசிக்கு செல்கிறார். புதனின் வக்ர சஞ்சாரத்தால் சிலருக்கு நன்மைகள் என்றால், சிலருக்கு நேரம் மோசமாகும். பலருக்கு மத்திம பலன்கள் இருக்கும். 2023, ஜனவரி 00:58 மணிக்கு இந்த பெயர்ச்சி நடைபெறும். புதனின் இந்த பெயர்ச்சி, யாருக்கு எதுபோன்ற பலன்களைத் தரும்? தெரிந்துக் கொள்ளுங்கள். 

தனுசு ராசியில் புதன் வக்ர பெயர்ச்சியாக சஞ்சரிப்பதன் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலிக்கும் என்றாலும், துலாம் முதல் மீனம்வரையிலான ஆறு ராசிகளுக்கான புதன் வக்ர பெயர்ச்சியின் பலன்கள்...

துலாம்
புதன் ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார். துலாம் ராசிக்காரர்களுக்கு, வேலை தொடர்பான திட்டங்கள் தீட்டுவதும், அதற்காக பயணிப்பதும் நல்ல அனுபவத்தைப் பெற உதவும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். காதல் உறவுகள் கைக்கொடுக்கும். வக்ரமாக பெயர்ச்சி ஆகும் புதன் பகவான், உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பார்.

பரிகாரம்: “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்று தினமும் 11 முறை ஜபிக்கவும்.

மேலும் படிக்க | ஆண்டின் கடைசி பெயர்ச்சி இது! தனுசு ராசியில் வக்ரமாக சஞ்சரிக்கும் புதனின் தாக்கம்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு எட்டாம் மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான புதன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். இது, பணியிடத்தில் இலக்குகளை அடைவதில் தாமதங்களை ஏற்படுத்தும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். நல்ல லாபத்தைப் பெறவும், தொழிலில் வளர்ச்சியைப் பெறவும் இது சிறந்த நேரமாக இருக்காது.

சில சவால்களை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் சிறிது கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.  

பரிகாரம்: "ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரோம் சஹ் புத்தாய நமஹ" என்று தினமும் 5 முறை உச்சரிக்கவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான புதன் முதல் வீட்டில் இருக்கிறார். இது உங்களுக்கு திருப்தியையும், மனநிறைவையும் கொடுக்கும். நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ள உதவும் காலம் இது. வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமான மற்றும் இனிமையான அன்பைப் பராமரிக்கும் காலம் இது.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்.

மேலும் படிக்க | 30 வருடத்திற்கு பின் கும்பத்தில் சனி; நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, புதன் ஆறு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாகி பன்னிரண்டாம் வீட்டில் இருக்கிறார். தனுசு ராசியில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் புதன், உங்களுக்கு திருப்திகரமாக இருக்காது. காதல் துணையுடனான உறவில் நல்லிணக்கம் காணப்படாமல் போகலாம். இது அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும், இது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும்.

பரிகாரம்: தினமும் நாராயணீயம் ஜபிக்கவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான புதன் உங்கள் ராசியைப் பொருத்தவரை பதினொன்றாம் வீட்டில் அமர்கிறார். வேலையில் விரும்பிய மரியாதை மற்றும் அங்கீகாரத்தைப் பெற புதனின் சஞ்சாரம் உதவும். மேலதிகாரிகளின் அபிமானமும் கிடைக்கும். திருமண வாழ்க்கையின் அடிப்படையில் உங்கள் துணையுடன் நல்ல உறவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையன்று பசுக்களுக்கு புல் தானம் செய்யுங்கள்.

மேலும் படிக்க | விருச்சிகத்தில் 'சதுர்கிரஹி யோகம்'; பண மழையில் நனையும் ‘3’ ராசிகள்!

மீனம்
மீனத்தின் நான்காம் மற்றும் ஏழாவது வீடுகளை ஆட்சி செய்யும் புதன், உங்கள் ராசியைப் பொறுத்தவரை பத்தாம் வீட்டில் இருக்கிறார். தொழில் ரீதியாக, நீங்கள் வளர்த்துக்கொள்ளும் திறமையால் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இது நீங்கள் வளர நிறைய வாய்ப்புகளை உருவாக்க மற்றும் கண்டறிய உதவும்.

தனுசு ராசியில் புதன் சஞ்சாரத்தின் போது பண வரவு நன்றாக இருக்கும், காதல் உறவைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் அடையும் நிலையில் நீங்கள் இருப்பீர்கள். 

பரிகாரம்: விஷ்ணுவுக்கு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கார்த்திகை மாத ராசிபலன்: முருகரின் அருள் பெற்ற ராசிக்கு ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News