Shani Jayanthi 2024: இந்த ராசிகளுக்கு சனி அருள் ஆரம்பம்... வாழ்வில் சுபுட்சம் அதிகரிக்கும்

Shani Jayanthi Lucky Zodiac Signs: ஜூன் 6 ஆம் தேதி சனி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. அதன் பிறகு சனி பகவான் ஜூன் 30ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 5, 2024, 03:02 PM IST
  • ஜோதிட சாஸ்திரப்படி, சனி ஜெயந்தி மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும்.
  • சனி அருளால் நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • இத்தனை நாட்களாக இருந்த நிதி நெருக்கடி இப்போது சரியாகும்.
Shani Jayanthi 2024: இந்த ராசிகளுக்கு சனி அருள் ஆரம்பம்... வாழ்வில் சுபுட்சம் அதிகரிக்கும் title=

Shani Jayanthi Lucky Zodiac Signs: இந்து ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். அவர் அனைத்து ராசிகளிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக உள்ளது. சனி பகவானின் அருள் பார்வை ஒருவர் மீது இருந்தால், அவர் தனது வாழ்வில் அனைத்து வித பலன்களையும் பெறுகிறார். 

இந்து பஞ்சாங்க கணக்கீடுகளின் படி, இந்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி சனி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. அதன் பிறகு சனி பகவான் ஜூன் 30ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் (Zodiac Signs) இதனால் அதிகப்படியான நற்பலன்கள் இருக்கும். இவர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

சனி பகவான் இந்த ராசிகள் மீது அருள் மழை பொழிவார்

மேஷம் (Aries)

ஜோதிட சாஸ்திரப்படி, சனி ஜெயந்தி மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். சனி அருளால் நிதி ஆதாயம் கிடைக்கும். இத்தனை நாட்களாக இருந்த நிதி நெருக்கடி இப்போது சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். 

மேலும் படிக்க | குரு உதயத்தால் இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம், நன்மைகள் அதிகமாகும்

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களும் குறிப்பாக சனி ஜெயந்தியை ஒட்டி பாக்கியம் கிட்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பல பயணங்களை மேற்கொள்ளக்கூடும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். இந்த காலத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறலாம். இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது அவசியம். கல்வி தொடர்பான துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

கும்பம் (Aquarius)

ஜோதிட சாஸ்திரப்படி கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. ஆகையால், நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் சனிபகவானின் அருளால் இந்த நேரமும் கடந்து போகும். இந்த நேரத்தில் நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். சனி பகவானின் அருளால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். சனி ஜெயந்தியன்று சனி பகவானை மகிழ்விக்க சனி ஸ்தோத்திரங்களை சொல்வதும், ஏழை ளியவர்களுக்கு தானங்களை செய்வது நல்லது. 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

மேலும் படிக்க | 2025 வரை சனியின் தாண்டவ ஆட்டம்.. தத்தி தவிக்கப் போகும் 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News