சுக்கிரன் பெயர்ச்சியால் பண மூட்டை மூட்டையாய் சேரும்.. இந்த ரசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Weekly Horoscope 29 July to 4 August 2024 : இந்த வாரம் முழுவதும் பல சிறப்பான நிகழ்வுகள் நடக்க உள்ளது. அதுவும் சுக்கிரனின் பெயர்ச்சி பல சுப, அசுப யோகங்கள் உருவாகும். இதனால் 12 ராசிகளுக்கும் வரும் 7 நாட்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 28, 2024, 02:50 PM IST
  • உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறலாம்.
  • பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்கலாம்.
  • மத பயணம் மேற்கொள்ளலாம்.
சுக்கிரன் பெயர்ச்சியால் பண மூட்டை மூட்டையாய் சேரும்.. இந்த ரசிகளுக்கு கோடீஸ்வர யோகம் title=

Horoscope Weekly 29 July to 4 August 2024 : ஜூலை கடைசி வாரம் ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது. சிம்ம ராசியில் செல்வச் செழிப்பைக் கொடுக்கும் சுக்கிரனின் பெயரச்சி ஜூலை 31ஆம் தேதி நிகழப் போகிறது. இதற்கிடையில், சந்திரன் மேஷ ராசியில் முதல் கடக ராசி வரை மாறுகிறார். இதனால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் எப்படி பட்ட பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

மேஷம்: வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். வீட்டை சீரமைக்கும் பணிகளுக்கு பணம் செலவாகலாம். பெண்கள் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், தேவையற்ற பொருட்களை வாங்குவது பட்ஜெட்டைக் கெடுக்கும். மன அழுத்தத்தைத் தவிர்க்க, யோகா அல்லது தியானம் செய்யுங்கள்.

ரிஷபம்: உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறலாம். சிக்கியிருந்த பணத்தை திரும்பப் பெறலாம். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். பணிச்சுமை மன உளைச்சலை அதிகரிக்கும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இனிப்பு உணவை மட்டுமே சாப்பிட வேண்டாம்.

மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம், பணம், புகழ்

மிதுனம்: புதிய வேலை வாய்ப்பை பெறலாம். புதனின் அருளால் வியாபாரத்தில் லாபம் ஈட்டலாம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும், இந்த வாரம் ஜங்க் ஃபுட் சாப்பிடவே கூடாது.

கடகம்: தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும், இதனால் பணம் செலவழியலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்ததை பெறலாம். பெரிய பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை குறித்து கவலைகள் ஏற்படலாம். சூரிய நமஸ்காரத்துடன் நாளைத் தொடங்குவது நன்மை பயக்கும்.

சிம்மம்: பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். செலவு குறையும், வருமானம் எகிறும். நிதி ஆதாயம் கிடைக்கும். உணர்ச்சி ரீதியாக வலுவாக இருக்கவும். ஆரோக்கியத்தில் மன அமைதி பெற, தவறாமல் பூஜை செய்யுங்கள்.

கன்னி: மூதாதையர் தொழிலை எடுத்து நடத்துவீர்கள். சொத்துக்கள் வாங்குவதாலும்,விற்பதாலும் லாபம் பெறலாம். ஆடம்பர பொருளில் பணம் செலவிடலாம். தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிந்தித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பூச்சி கடித்தால் தொற்று ஏற்படலாம்.

துலாம்: மத பயணம் மேற்கொள்ளலாம். பதவி உயர்வு கிடைக்கும். கடன் வாங்கிய பணப் பரிவர்த்தனைகளால் நஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். 

விருச்சிகம்: தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். முதலீடுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடைபெறும். இதனால் பணம் செலவாகலாம். உணவு, பானங்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நேரம். 

தனுசு: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆரோக்கியத்திற்காக பணம் செலவாகலாம். கடனுக்காக கொடுத்த பணத்தை திரும்பப் பெறலாம். வாரத்தின் நடுப்பகுதியில் குடும்பத்தில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். வயிற்றுப் பிரச்சனைகளைத் தவிர்க்க, சுத்தமான உணவை உண்ணுங்கள்.

மகரம்: பணியிடத்தில் ஆதிக்கம் அதிகரிக்கும். ஆபத்தான முதலீடு லாபத்தை தரும். உத்தியோகத்தில் அதிகாரம், சம்பளம் உயர்வு பெறலாம். ஆடம்பர வாழ்க்கை மற்றும் விஷயங்களில் அதிக ஈர்ப்பு ஏற்படும். 

கும்பம்: பொருள் வசதி அதிகரிக்கும், இதனால் பணமும் செலவாகும். செல்வம் பெருகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தொழில் முன்னேற்றம் பெரும். தைராய்டு, சர்க்கரை அல்லது குறைந்த ஹீமோகுளோபின் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

மீனம்: நிதி நிலை சற்று பலவீனமடையும். பணத்தை முதலீடு செய்ய புதிய திட்டத்தை உருவாக்கலாம். புதிய தொழிலை தொடங்கலாம். குடும்பத்தில் பதற்றம் அதிகரிக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News