Sukra Peyarchi In 3 Days: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களிலுமே சுக்கிரன் மிகவும் சுப கிறக்கமாக கருதப்படுகிறது. அதனுடன் இந்த கிரகம் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, போன்றவற்றை அள்ளி வழங்கும் என்பது ஐதீகம். ஒருவரிடன் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த ராசி நபருக்கு அரசனைப் போல வாழ்க்கையும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இது தவிர, சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார், அதனுடன் நிதி நிலையிலும் பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில் இன்னும் 4 நாட்களில ஜூலை 31 ஆம் தேதி சுக்கிரன் கிரகம் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதற்குப் பிறகு, அடுத்த மாதம் 25 ஆகஸ்ட் அன்று கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைவார் சுக்கிரன். இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். எனவே சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
மேஷம் (Aries Zodiac Sign): சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கடின உழைப்பின் முழுமையான பலனைப் பெறுவார்கள். உங்களை சுற்றி மகிழ்ச்சியான மற்றும் அமைதிஜான் சூழல் நிறைந்திருக்கும். இதன் காரணமாக வீட்டின் இனிமையான் சூழல் இருக்கும். காதலருடன் டேட்டிங் செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். வருமானத்தை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | குரு ஆட்டம் இன்னும் 291 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பண மழை, செல்வம், புகழ்
மிதுனம் (Gemini Zodiac Sign): சுக்கிரனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். சிறு பயணங்கள் செல்லும் வாய்ப்பையும் நீங்கள் பெறுவீர்கள். தொழிலில் புதிய பொறுப்புகளைப் பெறலாம். தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள்.
சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதீத அட்டகாசமான பலனைத் தரும். பணியிடத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். முதலீடு செய்ய ஜூலை 31 முதல் சாதகமான நேரமாக இருக்கும். புதிய ஒப்பந்தத்தைப் பெறலாம், இதன் மூலம் இரண்டு மடங்கு லாபத்தை பெறுவீர்கள். சுற்றுலா செல்லலாம். பொருளாதார ரீதியாகவும் லாபத்தை பெறலாம். வழிபாட்டில் அதிக ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சனி வெறி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு மகாராஜ பொற்காலம், பணமழை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ