மூல நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி! யாருக்கெல்லாம் பாதிப்பு! 3 ராசிகளுக்கு ஹை அலர்ட்!

Budh Gochar 2024: மூல நட்சத்திரத்தில் புதன் பகவான் இருப்பதால் சில ராசிகளுக்கு உறவினர், குடும்பத்தினர் மற்றும் தொழிலில் சிக்கல் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிகள் எவை என்று தெரிந்துக் கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 17, 2024, 07:49 AM IST
  • குடும்பத்தில் உறவு பாதிக்கப்படும்
  • பெற்றோருடனான மனக்கசப்பு அதிகரிக்கும்
  • உடன் பிறந்தோருடன் அனுசரித்து செல்லவும்
மூல நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி! யாருக்கெல்லாம் பாதிப்பு! 3 ராசிகளுக்கு ஹை அலர்ட்!   title=

மூல நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி:  07 ஜனவரி 2024 அன்று மூல நட்சத்திரத்தில் புதன் பகவான் இடம் பெயர்ந்தார். தனுசு ராசியில் முதல் நட்சத்திரம் மூல நட்சத்திரம். ராசியை குரு ஆட்சி செய்கிறது என்பதுடன் மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த நிலையில், இந்த புதன் பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கும்?  27 நட்சத்திரங்களில் 19வது நட்சத்திரம் மூல நட்சத்திரம் ஆகும். மூல நட்சத்திரம் கேது கிரகத்தால் ஆளப்படுகிறது.

மூல நட்சத்திரத்தில் புதன்
மூல நட்சத்திரத்தில் புதன் இருந்தால், கடின உழைப்பால் அறிவும், புலமையும் கிடைக்கும். எந்தவொரு பொருளாக இருந்தாலும், அதன் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்துக் கொள்ள ஒருவரைத் தூண்டும் சக்தியாக இருக்கும். அதிலும், மூல நட்சத்திரத்தில் புதன் இருந்தால், ஆழமாக சிந்திக்கும் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த மனப்போக்கு ஏற்படும். இந்த கிரக நிலை மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் ஆராய்ச்சி, உளவியல், ஆன்மீக ஆய்வு மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றின் மீதான சாய்வைக் குறிக்கலாம்.

தற்போது மூல நட்சத்திரத்தில் புதன் பகவான் இருப்பதால் சில ராசிகளுக்கு உறவினர், குடும்பத்தினர் மற்றும் தொழிலில் சிக்கல் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிகள் எவை என்று தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | Pongal 2024: ரவி யோகம் மற்றும் சித்தி யோகத்தால் பயனடையும் ராசிகள்! தை சங்கராந்தி ராசிபலன்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் 3ஆம் வீட்டையும், 6ஆம் வீட்டையும் ஆட்சி செய்து, மூல நட்சத்திரத்தில் சஞ்சரித்து 9ஆம் வீட்டில் அமர்கிறார். இங்குள்ள புதன், தந்தையுடனான உறவை பாதிக்கும். தந்தையுடன் வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடு ஏற்படும். அதிலும் ஜன்ம புதன் சரியாக அமையவில்லை என்றால் நிலைமை மோசமாக இருக்கும்.

அதேபோல, உங்கள் இளைய சகோதர சகோதரியுடனான உறவு கெடலாம். நீங்கள் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பதாக பலரிடமும் விமர்சனங்கள் எழும். இந்த காலகட்டத்தில் உங்களின் செயல்பபடுகளை பிறர் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும்.

மேலும் படிக்க | பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், வெற்றி...அனைத்தும் பொங்கும்!!

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் 1ம் வீட்டிற்கும், 4ம் வீட்டிற்கும் அதிபதியாகி, தற்போது புதன் மூல நட்சத்திரத்தில் நுழைந்து 7ம் வீட்டில் இருக்கிறார். மூல நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரம் திருமண வாழ்க்கையை பாதிக்கும். வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு வாக்குவாதம் ஏற்படும்.

மனைவி மட்டுமல்ல, நெருங்கிய உறவிற்குள்ளும் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டிய காலம் இது. வணிக கூட்டாளிகள் அல்லது சக ஊழியர்களுடனான உங்கள் உறவுகளுக்கும் பாதிப்பு வரலாம் என்பதல் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் 1ம் மற்றும் 10ம் வீட்டை ஆட்சி செய்கிறார். தற்போது 4வது வீட்டில் அமரும் புதன், உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்துவார். தாயுடன் கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதிலும் உங்கள் ஜாதகத்தில் புதன் மோசமான நிலையில் இருந்தால், நிதி தொடர்பான சிக்கல்களும் ஏற்படலாம்.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 500 ஆண்டுக்குப் பிறகு புதன் குருவின் அபூர்வ ராஜயோகம்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News