புதன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் கிரகன் புதன் கிரகம். புதன் கிரகம் ஒருவரது ஜாதகத்தில் சுபமாக இருந்தால் அந்த நபர் அதிக செல்வத்தைப் பெற்று பெரிய தொழிலதிபராக மாறுகிறார். மேலும் அவர் பேச்சு மற்றும் பிறருடன் உறவுகளை பேணுவதிலும் திறமையானவராக இருக்கிறார். புதனின் அருளால் இப்படிப்பட்ட நபர்கள் தங்கள் கனிவான பேச்சாலேயே தங்களுக்கு தேவையானவற்றை நடத்திக்கொள்வார்கள். புதன் ஆதிக்கத்தால் இவர்கள் புத்திசாலிகளாகவும் நல்ல பகுத்தறியும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
புதன் பெயர்ச்சி (Mercury Transit):
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே புதன் தனுசு ராசியில் (Sagittarius) பெயர்ச்சி ஆகிறார். புதனின் இந்த ராசி மாற்றம் ஜனவரி 7, 2024 அன்று நிகழும். அதற்கு முன் ஜனவரி 2, 2024 அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதேபோல் புதன் கிரகத்தின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை கொண்டு வரும். எனினும், இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் தங்கள் வாழ்வில் இந்த காலத்தில் சிறப்பான பல செயல்களை செய்வார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதன் பெயர்ச்சியால் நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள்
மேஷ ராசி (Aries):
புதன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் உடன் இருந்து ஆதரவு கொடுக்கும். எதிர்பாராத இடங்கலிலிருந்து பண வரவு இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெறக்கூடும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல இணக்கம் ஏற்படும். நிதி ஆதாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மிதுன ராசி (Gemini):
மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். மிதுன ராசியின் அதிபதியும் புதன் கிரகம்தான். இவர்கள் கூட்டுப் பணிகளால் ஆதாயம் அடைவார்கள். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக திருமணமானவர்களுக்கு இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்குள் புரிதல் அதிகரிக்கும். திருமணம் இன்னும் கைகூடாதவர்களுக்கு இப்போது புதனின் அருளால் திருமணம் நடக்கலாம்.
மேலும் படிக்க | 2024 ஜனவரி 3 இன்றைய ராசிபலன் - எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்?
கன்னி ராசி (Virgo):
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் ராசி மாற்றத்தால் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கான யோகமும் உள்ளது. இந்த பெயர்ச்சியின் பலனால் நிதி நிலைமை நன்றாக இருக்கும். மருத்துவம், ரியல் எஸ்டேட், சொத்து சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
தனுசு (Sagittarius):
தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி ஏற்படுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தருவார். இவர்களின் ஆளுமை மேம்படும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். உங்களுக்கு ஏதாவது நிறைவேறாத பெரிய ஆசைகள் இருந்தால், அவை இப்போது நிறைவேறலாம். கூட்டாண்மை மூலம் நன்மைகள் உண்டாகும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாள் கனவு நனவாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சூரியனின் அருளால்... தை மாதத்தில் பட்டையை கிளப்பப்போகும் ‘3’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ