தினசரி ராசிபலன்! இன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்டம்?

2023ம் ஆண்டின் இரண்டாம் மாதத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி-2) ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலனை அனுபவிக்க போகிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Feb 2, 2023, 06:24 AM IST
  • உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் சரியாக கவனம் செலுத்துவீர்கள்.
  • வேலை தேடுபவர்களுக்கு வேலை சம்பந்தமான நல்ல செய்தி கிடைக்கும்.
  • இன்று நீண்ட தூர பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
தினசரி ராசிபலன்! இன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்டம்?

மேஷம்:

இன்றைய தினம் நீங்கள் வேலைப்பளுவால் பிஸியாக காணப்படுவீர்கள்.  நெட்வொர்க் உதவியுடன் நீங்கள் வணிகம் மற்றும் வேலையின் அடிப்படையில் பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது.  நீங்கள் கூட்டணி அமைத்து சில புதிய செயல்களை தொடங்க வாய்ப்பு உள்ளது.  உங்கள் வணிகத்தில் நீங்கள் சில முதலீடுகளைப் பெறலாம், இது எதிர்காலத்தில் உங்கள் தொழிலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.  கணவன்-மனைவி இருவருக்குமிடையேயான உறவு இன்று மேம்படும்.

ரிஷபம்:

இன்று உங்களை நீங்களே ஆய்வு செய்வீர்கள், இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் சரியாக கவனம் செலுத்துவீர்கள், விரைவில் உங்கள் இலக்கை அடைந்து நீங்கள் வெற்றி காண்பீர்கள்.  உங்கள் படைப்பாற்றல் மேம்படலாம் மற்றும் கலைப்பொருட்கள், திரைப்படங்கள், கவர்ச்சி மற்றும் நிஜ வாழ்க்கைப் பொருட்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.  நாளின் முடிவில், உங்கள் வாழ்க்கை தொடர்பான சில திருப்தியை நீங்கள் உணர்வீர்கள்.

மேலும் படிக்க | பிப்ரவரி 2023 ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்; நிதி நெருக்கடி!

மிதுனம்:

உங்கள் வீடு அல்லது அலுவலகத்தைப் புதுப்பிக்க உங்கள் தனிப்பட்ட திறனை பயன்படுத்துவீர்கள், உங்கள் இலக்குகளை நோக்கியே உங்களது கவனமும் இருக்கும்.  இன்றைய தினம் அதிக வேலையால் உங்கள் மனதை சோர்வடையக்கூடும்.  இதனால் உங்களுக்கு கவலை, அமைதியின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம், இதனால் உங்கள் இல்லற வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படும். மாணவர்கள் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் படிப்பில் முழு கவனம் செலுத்தவேண்டும்.

கடகம்:

இன்று நீங்கள் அதிருப்தி அடையலாம், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் ஒத்துழைக்காமல் போகலாம் அதனால் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.  எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் முன் ஆவணங்களை கவனமாக படியுங்கள்.  தேவையற்ற மற்றும் முழுமையாக தெரியாத விஷயங்களில் புதிய முதலீடுகளைச் செய்வது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். 

சிம்மம்:

இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள், இதுவரை தாமதப்படுத்திய திட்டங்களை இப்போது தொடங்கலாம்.  உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க உங்களுக்கு உதவுவார்கள், இது எதிர்காலத்தில் உங்களுக்கு லாபத்தைத் தரக்கூடும்.  உங்கள் குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக நீங்கள்  சில பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.  வேலை தேடுபவர்களுக்கு வேலை சம்பந்தமான நல்ல செய்தி கிடைக்கும்.

கன்னி:

இன்று நீங்கள் குடும்ப பிரச்சனைகளில் பிஸியாக இருக்கலாம். உள்நாட்டு விவகாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களில் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் ஆணவம் குடும்ப நல்லிணக்கத்தை பாதிக்கலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

துலாம்:

இன்று உங்கள் திறமையால் உங்கள் வேலையில் சில புதிய கண்டுபிடிப்புகளை நீங்கள் செய்வீர்கள். உங்கள் பெற்றோரின் தொழிலின் மூலமாக உங்களுக்கு பெரிய அளவில் வருமானத்தை தரும் ஆர்டரைப் பெறலாம், இதன் காரணமாக எதிர்காலத்தில் தொழிலில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை காண்பீர்கள்.  உங்கள் வேலையில் புதிய பொறுப்புகள் உங்களை பிஸியாக மாற்றலாம், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.  வாழ்க்கைத் துணையுடன் புரிதல் மேம்படும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் படிக்க | பிப்ரவரி மாத பெயர்ச்சிகளால் ‘இந்த’ ராசிகளுக்கு பணத் தட்டுபாடே இருக்காது!

விருச்சிகம்:

இன்று நீங்கள் மந்தமாக உணரலாம், உங்கள் உடல்நிலை சரியில்லாமல் போகலாம் மற்றும் இன்று பதட்டமாக உணர்வீர்கள்.  இன்று கவலையாகவும், அமைதி இல்லாமலும் காணப்படுவீர்கள்.  இன்று வணிகம் அல்லது ரியல் எஸ்டேட்டில் உங்கள் முக்கியமான முதலீடுகளை ஒத்திவைப்பது நல்லது.  வாகனம் ஓட்டுவதில் இன்று கவனம் தேவை மற்றும் இன்று நீண்ட தூர பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.  உங்கள் குழப்பமான மற்றும் பதட்டமான மனநிலையை கட்டுப்படுத்த நீங்கள் இன்று கொஞ்ச நேரம் தியானம் செய்யலாம்.

தனுசு:

இன்று பெரியவர்களின் ஆசீர்வாதங்களால் நீங்கள் மகிழ்ச்சியடையும் நாள்.  நீங்கள் செய்யும் முதலீடு  உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும், இதுவரை அடைந்த நஷ்டம் அனைத்தும் இப்போது லாபமாக மாறிவிடும்.  உங்கள் சேமிப்பால் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும், குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிடலாம்.  தொண்டை, பற்கள், காது அல்லது மூக்கு தொடர்பான பிரச்சனைகள் இப்போது சரியாகக்கூடும்.

மகரம்:

இன்று நீங்கள் பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், உங்கள் பொறுமைக்கு பாராட்டு கிடைக்கும்.  இன்று நீங்கள் உங்கள் வேலையில் சிறப்பான முறையில் கவனம் செலுத்துவீர்கள்.  உங்கள் பெற்றோரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும் மற்றும் நீங்கள் இன்று பெரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.  தொழில்முறை முன்னணியில் உங்களுக்கு உதவக்கூடிய சில செல்வாக்கு மிக்க நபரையும் நீங்கள் சந்திக்கலாம்.  இல்லற வாழ்வில் நல்லிணக்கத்தை அதிகரிக்கும் உங்கள் காதல் தருணங்களையும் நீங்கள் அனுபவிக்கலாம்.

கும்பம்:

இன்று உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும், உங்களைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு உதவுங்கள். தொண்டு அல்லது மத ஸ்தலங்களுக்கு சில தொகையை நன்கொடையாக வழங்கலாம்.  நீங்கள் செய்த நல்ல விஷயங்கள் உங்களுக்கு பல வெற்றிகளை பெற செய்யும்.  இன்று நீங்கள் உங்களை சுற்றி சில தெய்வீக சக்திகளை உணர்வீர்கள், இதனால் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். 

மீனம்: 

இன்றைய தினம் நீங்கள் கொஞ்சம் மந்தமான நிலையில் காணப்படுவீர்கள், ஏதேனும் முன்னர் இருந்த பழைய பயம் உங்களுக்கு மறுபடியும் வரலாம்.  நீங்கள் இப்போது யாரையும் நம்பாத மனநிலையில் காணப்படுவீர்கள்.  இந்த மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு நீங்கள் தியானம் அல்லது ஏதேனும் சில கடவுள் வழிபாடுகளை செய்யலாம்.  மாலை நேரத்தில் ஏதேனும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள், இது உங்கள் மனநிலையை மாற்றும்.

மேலும் படிக்க | February Horoscope 2023: பிப்ரவரி மாதம் யாருக்கு எழுச்சி, யாருக்கு வீழ்ச்சி? முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News