இன்றைய ராசிபலன்: இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம்!

தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜூலை 23, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் கண்டறியவும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2023, 05:39 AM IST
  • குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
  • வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
  • உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.
இன்றைய ராசிபலன்: இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம்! title=

அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

இன்றைய ராசிப்பலன் - 23.07.2023

மேஷம்

இன்று உங்களுக்கு ஆச்சிரியப்படுத்தகூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியோர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மேலும் படிக்க | சதயத்தில் இணையும் சனி ராகு! அக்டோபர் முதல் ‘இந்த’ ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும்!

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பொருளாதார ரீதியான நெருக்கடிகளால் மனஉளைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கடகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் எதிர்பாராத வகையில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் செய்ய நேரிடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வீண் பேச்சால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை அளிக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வகையில் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மகரம்

இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கிருந்த பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

(கணித்தவர்: ஜோதிட மாமணி முனைவர் முருகு பால முருகன்
முகநூல்- @murugubalamurugan)

மேலும் படிக்க | அமாவாசை அன்று காகங்களுக்கு உணவளித்தால் இவ்வளவு நன்மைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News