ஒரே ராசியில் சேரும் சூரியன், புதன்; இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

ஜோதிடத்தில் சூரியனுக்கும் புதனுக்கும் தனி இடம் உண்டு. ஜூலை 16 மற்றும் 17 ஆம் தேதி சூரியனும், புதனும் கடக ராசியில்  பிரவேசிக்கிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 10, 2022, 09:16 AM IST
  • ஜூலை 16ஆம் தேதி சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கிறார்
  • ஜூலை 17ஆம் தேதி புதன் கடக ராசியில் பிரவேசிக்கிறார்
  • யாருக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்
ஒரே ராசியில் சேரும் சூரியன், புதன்; இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் title=

 ஒரே ராசியில் சூரியனும் புதனும்: வேத ஜோதிடத்தில் சூரியனுக்கும் புதனுக்கும் தனி இடம் உண்டு. அதன்படி வருகிறது ஜூலை 16ஆம் தேதி சூரியன் கடக ராசியிலும், அதேபோல் ஜூலை 17ஆம் தேதி புதன் கிரகம் கடக ராசியிலும் பிரவேசிக்கிறார். சூரியனும், புதனும் ஒரே ராசியில் வருவதால் புத்தாதித்ய யோகம் உருவாக இருக்கிறது. எனவே ஜோதிட கூற்றின்படி புத்தாதித்ய யோகம் மிகவும் முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகம் அமைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் பிராசிக்கும். 

நவகிரகங்களின் நாயகனாய் விளங்கும் சூரியன் ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். தந்தை,  தன்னம்பிக்கை, புகழ், கௌரவம் இவ்வாறாக இன்னும் பல தலைமை வகிக்கும் பல விஷயங்களுக்கு காரகராக சூரியன் விளங்குகிறார். அதேபோல் நவகிரகங்களில் சிறிய கிரகமாக விளங்குபவர் மனிதர்களை இயக்கும் எண்ணங்களுக்கு அடிப்படை புதன். ஆகும். புதனைப் பொதுவாக புத்தி காரகன் என்று அழைப்பார்கள். புத்தி என்று வரும் போது  கல்வி, ஞானம், விவேகம், அனுபவம் எல்லாம் சேர்ந்ததாகும். இந்த நிலையில் சூரியனும் புதனும் ஒரே ராசியில் வருவதால் யாருக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்பதை விரிவாக இங்கே தெரிந்து கொள்வோம்- 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் வெற்றி உண்டாகும். 
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
லாபம் பெருகும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
சமய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் பணி பாராட்டப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது.
பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
தொழிலுக்கு ஏற்ற காலம் அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
புதிய வேலையைத் தொடங்க மிகவும் சாதகமான நேரம் இது.
வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.
சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
கௌரவம், மரியாதை உயரும் வாய்ப்புகள் உண்டு.

மகரம்

நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தை வரம் என்று சொல்ல முடியாது.
எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள்.
லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும்.
கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

பேச்சு வணிகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வீடு மற்றும் வாகனத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குழந்தைகளைப் பற்றிய கவலை குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News