தை அமாவாசை 2023: ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் இந்த முறை சனிக்கிழமை வருவது கூடுதல் சிறப்பு. ஏனெனிலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை சனாதன தர்மத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபட, தை அமாவாசை மற்றும் சனி அமாவாசை என கூடி வரும் வரும் 12ம் தேதி அன்று , சில தானங்களை அளித்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த முறை தை மாத அமாவாசை ஜனவரி 21ம் தேதி அதாவது சனிக்கிழமை வருகிறது. தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் வாழ்க்கையில் உள்ள துன்ப மேகங்கள் நீங்கி இன்பமான வாழ்வைப் பெறலாம்.
தர்ப்பணம் மற்றும் தானம்
சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது சிறந்தது. ஏழைளுக்கு தானம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், ஆடைகள், ஆகியவற்றை நாம் தானமான அளித்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம். ஏழை பசியை நீக்கினால் முன்னோர்களின் அருள் கண்டிப்பாக கிடைக்கும். அதே போல் தாகத்தை தணிக்கும் தண்ணீர் தானமும் சிறப்பானது. தேவையானவர்ளுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது மிகவும் சிறந்தது.
மேலும் படிக்க | Lakshmi Kadaksham: வீட்டில் லட்சுமி கடாட்சம், செல்வம் பெருக என்ன செய்வது?
அரச மர வழிபாடு
அரச மரத்தில் தெய்வங்களும், முன்னோர்களும் வசிக்கிறார்கள் என்ற ஆன்மீக நம்பிக்கை உள்ளது. எனவே, அமாவாசை தினத்தில் அரச வழிபாடு செய்வதன் மூலம் தெய்வங்களின் அருளும், முன்னோர்களின் அருளும் ஒரு சேர கிடைக்கும். அரச மரத்திற்கு நீர் வழங்கி அதை சுற்றி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ந்து உங்கள் கஷ்டங்களும் நீங்கும். உங்களுக்கு ஏழைரை நாட்டு சனி நடக்கிறது என்றால், அதன் பாதிப்பில் இருந்து விடுபடவும் இது உதவும். அமாவாசை அன்று, கோவிலிலோ அல்லது திறந்த வெளியிலோ அரச மர கன்றை நடவும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுடன் சனிதேவரின் மனம் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. அரச மரக் கன்றை நடுவதன் மூலம் ஜாதகத்தில் உள்ள சனி தோஷங்களும் நீங்கும்.
ஹனுமனின் வழிபாடு
ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, அனுமனை வணங்குவதும் அவசியம் என்று கருதப்படுகிறது. எனவே, சனி அமாவாசை நாளில், ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம், அஹனுமன் மந்திரத்தையும் உச்சரிக்கவும். இந்த பரிகாரத்தின் மூலம், உடல், மன மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.
நாய்க்கு உணவளித்தல்
சனி அமாவாசை நாளில், நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும், எண்ணெயில் முகம் பார்த்த பிறகு, அதை தானம் செய்யலாம். சனி பகவான் சனி அமாவாசை நாளில் தேவைப்படும் ஒருவருக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சியடைந்து, ஆசிகளை வழங்குகிறார் என ஆன்மீக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | புதன் கொடுக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்! பணத்தில் புரளும் 4 ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ