புதன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்

Mercury Transit: ஜனவரி 13 தனுசு ராசியில் புதன் கிரகம் உதயமாகுகிறார். இதைத் தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி தனுசு ராசியில் பெயர்ச்சியாகுகிறார். புதனின் இந்த சஞ்சாரத்தின் தாக்கம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தெரியும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 9, 2023, 04:12 PM IST
  • தனுசு ராசியில் புதன்.
  • இந்த ராசிகளுக்கு திடீர் ஜாக்பாட்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் title=

புத்தாண்டில் நுழைந்த மறுநாளே புத்திகாரகனான புதன் தனது நிலையை மாற்றினார். அதாவது வக்ர நிலையில் தனுசு ராசியில் உள்ள புத்திகாரகனான புதன், ஜனவரி 02 ஆம் தேதி அஸ்தமனமாகினார். புதன் இந்த அஸ்தமன நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் தேதி வரை இருப்பார். மேலும் இதனால் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் மோசமான பலனையும் பெறுகின்றனர். இதற்கிடையில் ஜனவரி 18ஆம் தேதி தனுசு ராசியில் மீண்டும் பெயர்ச்சியாக உள்ளார். பின்னர் பிப்ரவரி 7ம் தேதி இந்த ராசியை விட்டு மகர ராசியில் சஞ்சரிக்கிறார் புதன். எனவே புதனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தென்படும். 

தனுசு ராசியில் உதயமாகும் புதன்
இந்த நிலையில் தற்போது அஸ்தமன நிலையில் இருக்கும் புதன், 2023 ஜனவரி 12 ஆம் தேதி தனுசு ராசியில் உதயமாகவுள்ளார். இந்த புதனின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலுமே ஒருவித தாக்கம் தெரியும். குறிப்பாக தனுசு ராசியில் புதன் உதயமாவதால் சில ராசிக்காரர்கள் தொழிலில் அதிக வெற்றியையும், லாபத்தையும் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

மிதுனம்
மிதுன ராசிக்கு ஏழாம் வீட்டில் புதன் உதயமாகுகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு வேலையில் பலன் பெறலாம். உத்தியோகம் செய்பவர்கள், தங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவதோடு, பணியிடத்திலும் தாக்கம் அதிகரிக்கும். தாயின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

சிம்மம் 
சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீட்டில் புதன் உதயமாகும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளுடன் உறவு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த காலம் பயனுள்ளதாக இருக்கும். 

துலாம்
துலாம் ராசியில் புதன் மூன்றாம் வீட்டில் உதயமாகும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள்.

விருச்சிகம்
இந்த ராசி நபர்கள் அதிகபட்ச லாபத்தை ஈட்டுவார்கள். உங்கள் தொழிலை அதிகரிக்க நினைத்தால், கிரகங்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்களை மக்கள் பாராட்டுவார்கள். புகழும் மரியாதையும் கூடும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

தனுசு
தொழிலில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் காதல் வாழ்க்கையும் வலுவாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்கு 11ம் வீட்டில் புதன் உதயமாகும். எனவே, பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.மேலும் உங்களுக்கு நிதி நன்மைகளும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதனின் திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி முதல் பண மழை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News