ஆக்ரா: உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் சத்சங்கத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துவிட்டது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். மத போதகர் விஸ்வ ஹரி போலே பாபாவின் சத்சங்கத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த உத்தரப் பிரதேச மாநில டிஜிப் பிரசாந்த், இந்த சோக சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், என்ன நடந்தது என்பதை ஊகமாக சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
#WATCH | Hathras Stampede | Uttar Pradesh DGP Prashant Kumar says, "116 people have died in the incident. All things are under investigation and we do not want to affect the process by jumping on to conclusions. The matter will proceed based on the findings of the… pic.twitter.com/1lwFnHKEYv
— ANI (@ANI) July 2, 2024
யார் இந்த சாமியார் விஸ்வ ஹரி போலே பாபா?
கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டியாலி பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் பால் அல்லது போலே பாபா என்று அழைக்கப்படும் விஸ்வ ஹரி போலே பாபா. 17 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், \போலீஸ் பணியில் இருந்து விலகி சாமியாராக அவதாரம் எடுத்துவிட்டார்.
பக்தர்களின் கூட்டம்
போலே பாபா என்ற இந்த சாமியாரை பின்பற்றுபவர்கள் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் பரவியிருக்கின்றனர். போலே பாபாவுக்கு எந்த மத குருவும் இல்லை. அவர் தெய்வத்தை 'தரிசனம்' செய்த பிறகு, காவல்துறை பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, ஆன்மீகத்தில் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.
போலே பாபா ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தனது 'சத்சங்கம்' (கூட்டு வழிபாடு) ஏற்பாடு செய்து வந்தார், நேற்று செவ்வாய்க்கிழமை ஹத்ராஸ் பகுதியில் சத்சங்கம் நடைபெற்றது என்றால், கடந்த வாரம் மைன்புரி மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு கூட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க | மேம்பாலத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பலி
அனுமதி 50 பேருக்கு வந்ததோ 50 ஆயிரம் பக்தர்கள்
கோவிட் தொற்றுநோய் காலத்தில் போலே பாபா பெரிய சர்ச்சையில் சிக்கினார். மே 2022 இல் ஃபரூகாபாத் மாவட்டத்தில் அவர் ஏற்பாடு செய்த கூட்டுப் பிரார்த்தனை சத்சங்கத்தில் கலந்து கொள்ள 50 பேருக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், கூட்டத்திற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால், உள்ளாட்சி நிர்வாகத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. அப்போது அவர் சர்ச்சையில் சிக்கினார்.
நேற்று நடைபெற்ற செவ்வாய்கிழமை ஹத்ராஸ் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்ன? அனலடிக்கும் வெப்பம் மற்றும் சூட்டிற்கு மத்தியில் திரளாக கூடியிருந்த மக்கள் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்ததால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மூச்சுக் காற்றும் வெப்பமாய் அனலடிக்க, அதிக அளவிலான மக்கள் ஒரே இடத்தில் இருந்ததால் ஏற்பட்ட அழுத்தமும் மக்களை துன்பப்படுத்தியது.
கூட்டத்தில் உட்கார முடியாமல் வெளியேற நினைத்த மக்களை, சத்சங்கத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் வெளியேற விடாமல் தடுத்தனர். ஏனென்றால், சாமியாரும் அவருடன் இருப்பவர்களும் வெளியேறிய பிறகு தான் மக்கள் வெளியேறவேண்டும் என்ற நியதியை ஊழியர்கள் பின்பற்றி மக்களை தடுத்தனர். மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டவுடன், அனைவரும் ஒரே நேரத்தில் அவசரமாக வெளியேற முற்பட்டதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்
ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசl தொடர்பாக வருத்தத்தை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் நிவாரணமாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான இரண்டு நாள் விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மோடி, பக்தர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, "மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் பக்தர்கள் இறந்துபோன வருத்தமான செய்தி கிடைத்தது. ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், பல சோகமான மரணங்கள் நிகழ்ந்தது என் கவனத்திற்கு வந்துள்ளது" என்றார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் பலி! பலர் படுகாயம்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ