2016 ஐசிசி கனவு அணி அறிவிப்பு; விராட் கோஹ்லி கேப்டன்

Last Updated : Dec 22, 2016, 02:24 PM IST
2016 ஐசிசி கனவு அணி  அறிவிப்பு; விராட் கோஹ்லி கேப்டன் title=

சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள்  போட்டிகளின் கனவு அணியை அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் ஒருநாள்  போட்டிகளின் ஐசிசி கனவு அணியை ஆண்டு கடைசியில் அறிவிப்பது வழக்கம். 2016-ம் ஆண்டிற்கான ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களை பார்ப்போம்.

டெஸ்ட் அணியில் விவரம்:-

டேவிட் வார்னர்( ஆஸ்திரேலியா), அலய்ஸ்டர் குக் (இங்கிலாந்து) கேப்டன், கனே வில்லியம்சன் ( நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஆடம் வோஹ்ஸ் (ஆஸ்திரேலியா, பெர்ஸ்டோவ்(இங்கிலாந்து), பென்ஸ்டோக்ஸ்( இங்கிலாந்து), அஷஸ்வின்(இந்தியா),  ரெங்கனா ஹெராத்( இலங்கை), மிட்செல் ஸ்டார்க்( இங்கிலாந்து), டேல் ஸ்டைன்( தென் ஆப்பிரிக்கா), 12 வது வீரர் ஸ்டீவ் ஸ்மித்( ஆஸ்திரேலியா)

ஒருநாள் அணியும் விவரம்:-

டேவிட் வார்னர் ( ஆஸ்திரேலியா), குவெண்டன் டி காக்( தென் ஆப்பிரிக்கா), ரோகித் சர்மா( இந்தியா, விராட் கோஹ்லி (இந்தியா) கேப்டன், டி வில்லியர்ஸ்( தென் ஆப்பிரிக்கா), ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து), மிட்செல் மார்ஸ்( ஆஸ்திரேலியா), ரவீந்தர் ஜடேஜா(இந்தியா), மிட்செல் ஸ்டார்க்( ஆஸ்திரேலியா), ரபாடா( தென் ஆப்பிரிக்கா), சுனில் நரைன்( வெஸ்ட் இண்டீஸ்), 12 வது வீரர்- இம்ரான் தாஹீர்( தென் ஆப்பிரிக்கா) 

டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News