IPL 2020 SRH vs CSK: செம கோபத்தில் ரசிகர்கள்; இன்றைய போட்டியில் CSK வெல்லுமா?

புள்ளிகள் அட்டவணையில் ஐதராபாத் ஐந்தாவது இடத்தையும், சென்னை ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. சிஎஸ்கே வெறும் 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 13, 2020, 04:09 PM IST
IPL 2020 SRH vs CSK: செம கோபத்தில் ரசிகர்கள்; இன்றைய போட்டியில் CSK வெல்லுமா? title=

ஐபிஎல் 2020, எஸ்ஆர்ஹெச் vs சிஎஸ்கே: இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) தொடரின் 13 வது சீசனின் 29 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் துபாயில் இன்று மாலை 7.30 மணிக்கு மோத உள்ளனர். இந்த சீசனின் லீக் கட்டத்தின் பாதி போட்டிகள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, புள்ளிகள் அட்டவணையில் ஐதராபாத் ஐந்தாவது இடத்தையும், சென்னை ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. சிஎஸ்கே (Chennai Super Kings) வெறும் 4 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. மகேந்திர சிங் தோனியின் அணி இனி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இரு அணிகளிலும் விளையாடும் பதினொரு வீரர்களை பற்றி பார்த்தால், ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியின் கடைசி போட்டியில், விஜய் சங்கருக்கு பதிலாக அப்துல் சமத் நியமிக்கப்பட்டார். இந்த போட்டியில் அவர்கள் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த சீசனில் ஒரு போட்டியில் அரைசதம் அடித்த பிரியாம் கார்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.

ALSO READ |  IPL 2020: ‘திரும்பி வா சின்ன தல’ Suresh Raina-ஐ அழைக்கும் CSK fans!!

இரு அணிகளுக்கும் சாத்தியமான பதினொரு வீரர்கள் பட்டியல்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், சந்தீப் சர்மா, டி நடராஜன், கலீல் அகமது.

சென்னை சூப்பர்கிங்ஸ்: ஷேன் வாட்சன், என் ஜெகதீஷன், ஃபாஃப் டுப்ளெஸிஸ், அம்பதி ராயுடு, சாம் கரண், மகேந்திர சிங் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், கர்ன் ஷர்மா, ஷார்துல் தாக்கூர்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News