இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முன்னதாக ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஷிகர் தவன் டெஸ்ட் போட்டியில் தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார். ஷிகர் தவன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து இந்திய கேப்டன் விராத் மற்றும் ரஹானே நிதானமாக விளையாடி வந்தனர். ஆனால் தேநீர் இடைவேளைக்கு பிறகு ரஹானே 17 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
முதல் நாளில் இந்தியா முக்கிய விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுத்து. 6 விக்கெட் இழப்பு 329 ரன்கள் எடுத்தது.
விராட் 42(84) ரன்களும், அஸ்வின் 31(75) ரன்களும், சாஹா 16(43) ரன்களும் குல்தீப் யாதவ் 26(73) ரன்களும், முகம்மது ஷமி 8(13) அவுட் ஆனார்கள். மறு முனையில் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி வந்த ஹார்டிக் பாண்டியா, உமேஷ் யாதவுடன் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 86 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிச்சரும், 7 பவுண்டரியும் அடங்கும்.
இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 120 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 485 ரன்கள் எடுத்துள்ளது. ஹார்டிக் பாண்டியா(107), உமேஷ் யாதவ்(3) விளையாடி வருகின்றனர்.
இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 4 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.