IND vs AUS: கில்லுக்கு பதில் சூர்யகுமாரா, இஷான் கிஷானா... எந்த MI வீரருக்கு வாய்ப்பு? - ரோஹித் போடும் பிளான்!

IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதில் கில் பங்கேற்க மாட்டார் என்பதால் அவருக்கு பதில் யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 8, 2023, 12:10 AM IST
  • கில் முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்.
  • அவருக்கு பதில் ஓப்பனிங் யார் விளையாடுவார் என்ற கேள்வி நீடிக்கிறது.
  • இதனால், அணியில் சூர்யகுமார் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு.

Trending Photos

IND vs AUS: கில்லுக்கு பதில் சூர்யகுமாரா, இஷான் கிஷானா... எந்த MI வீரருக்கு வாய்ப்பு? - ரோஹித் போடும் பிளான்! title=

ICC World Cup 2023, IND vs AUS: ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா வரும் நவ. 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் நான்கு இடங்கை ஆக்கிரமித்துள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடைந்த படுதோல்வியால் கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் முறையே 7,8, 9ஆவது இடத்தில் உள்ளன. 

இதற்கிடையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக். 8) இந்தியா - ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடரை நடத்தும் இந்தியா இம்முறை 12 வருடங்களுக்கு பின் உலகக் கோப்பையை (ICC World Cup 2023) கைப்பற்றும் என பெரிதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில், சிறந்த படையாக காட்சியளிக்கும் ஆஸ்திரேலியாவும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முன்னணியில் உள்ளன. zeenews.india.com/tamil/sports/ind-vs-aus-odi-world-cup-a-look-back-at-the-historic-clash-36-years-ago-and-what-to-expect-now-466834

IND vs AUS: மழைக்கு வாய்ப்பா?

எனவே, இரு பெரும் அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மைதானத்தில் போட்டியை நேரில் காண அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் கவனமும் இந்தியா - ஆஸ்திரேலியா (IND vs AUS) போட்டியின் மீதுதான் இருக்கும். சமீப நாள்களில் சென்னையின் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், போட்டி நடைபெறும் நாளில் அதுவும் மழைக்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்தியா - ஆஸ்திரேலியா: இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா போட்ட ஸ்கெட்ச்!

குறிப்பாக, தமிழ்நாடு வெதர்மேன் அவரது X பக்கத்தில் தெரிவித்ததாவது, இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் பகுதியில் இன்று மழைக்கான வாய்ப்பு குறைவு என்பதால் போட்டி முழுமையாக தடைப்பட வாய்ப்பில்லை என்றார். இது ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. 

கில் குறித்து ரோஹித் சர்மா

இரு அணிகளும் இந்த போட்டிக்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட வந்த நிலையில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் கில்லுக்கு (Shubman Gill) திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஒரு சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ரோஹித் சர்மா (Rohit Sharma) போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது கூறியதாவது,"எல்லோரும் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்கள்ய. ஆனால் கில் நூறு சதவீதம் இல்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், ஆனால் காயம் பற்றிய கவலை இல்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை, நாங்கள் அவரை தினமும் கண்காணித்து வருகிறோம். அவர் குணமடைய அவருக்கு எல்லா வாய்ப்பையும் நாங்கள் வழங்கப் போகிறோம். 

அவர் தொடரில் இருந்து விலகவில்லை. நான் அவருக்காக வருந்துகிறேன். முதலில் ஒரு மனிதனாக இருப்பதன் அடிப்படையில், அவர் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கில் விளையாட வேண்டும் என்று கேப்டனாக நினைக்கவில்லை; யாரும் நோய்வாய்ப்படுவதை விரும்பாததால் அவர் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர் நலமடைய வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். அவர் ஒரு இளைஞர், நல்ல உடலை அமைப்பை பெற்றவர், விரைவில் குணமடைவார்" என்றார்.

மேலும் படிக்க | IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் ஏன் இடம்பெறுவார்? 6 காரணங்கள்

ஓப்பனிங்கில் இஷான் வந்தால்...

இதன்மூலம், அவர் முதல் போட்டியில் விளையாடுவதும் உறுதியில்லை. எனவே, ஓப்பனிங்கில் ரோஹித் உடன் யார் களமிறங்குவார் (Replacement For Gill) என கேள்வி சில நாள்களாகவே நீடித்து வருகிறது. இதில் பலரும், ரோஹித் உடன் ஓப்பனிங்கில் இஷான் கிஷானை (Ishan Kishan) இறக்கினால் விராட், ஷ்ரேயாஸ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின் என பேட்டிங் ஆர்டர் அமையும், இது ஏற்கெனவே திட்டமிட்ட பேட்டிங் வரிசையாக இருப்பதால் கூடுதல் நன்மை என்கின்றனர். 

ஓப்பனிங்கில் ராகுல் வந்தால்...

ஆனால், மற்றொரு தரப்போ 'ஒருவேளை இஷான் ஓப்பனிங்கில் நல்ல விளையாடிவிட்டால், கில் வந்த உடன் அவரை வெளியே அமரவைத்துவிடுவீர்களா... அது சாத்தியமில்லை என்பதால் இஷானுக்கு பதில் அந்த இடத்தில் சூர்யகுமாருக்கு (Suryakumar Yadav) இடமளிக்க வேண்டும். ஆனால், கேஎல் ராகுல் ஓப்பனிங் இறங்க வேண்டும்' என தெரிவிக்கின்றனர். குறிப்பாக ராகுல் - ரோஹித் ஜோடிக்கு பின் விராட், ஷ்ரேயாஸ், ஹர்திக், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, அஸ்வின் என இந்த ஆர்டரில் விளையாட வேண்டும் எனவும் பரிந்துரைக்கின்றனர். 

ராகுலுக்கு (KL Rahul) ஏற்கெனவே ஓப்பனிங்கில் அனுபவம் உள்ளது என்பதாலும், அவர் ஃபார்மில் இருப்பதாலும் இதனை செய்ய வேண்டும் என்கின்றனர். மேலும், சூர்யகுமார் 6ஆவது வீரராக களமிறங்குவதன் மூலம் அவரின் இயல்பான ஆட்டத்தை அவரால் வெளிக்கொண்டு வர இயலும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் ஜடேஜா 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் அதுவே அவரின் சரியான பேட்டிங் ஆர்டர் எனவும் சில கருத்து கூறுகின்றனர்.

ரோஹித் கையில் முடிவு

எனவே, ஒருவேளை கில் வந்தாலும், சூர்யகுமாரை வெளியே வைப்பது எளிமையாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். இருப்பினும், ஸ்டார்க்கை சமாளிக்க டாப்-ஆர்டரில் இடதுகை பேட்டர் ஒருவர் வேண்டும் என்பதால் ரோஹித் இஷானை அணியில் சேர்க்கவும் வாய்ப்புள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, பிளேயிங் லெவனை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News