இந்தியா இலங்கை இடையில் இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை எடுத்துள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 336 என்ற மிகப்பெரிய ஸ்கோரை அடைவதில் கே.எல்.ராகுலின் அபாரமான சதத்திற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் மிடில் ஆர்டரில் உள்ள வலிமை இன்று தென்பட்டது. 40 பந்துகளில் 77 ரன்களை எடுத்து ரிஷப் பந்தும் தன்னுடைய அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் மற்றும் ராகுலின் சூறாவளி ஆட்டத்தால் இந்த தொடரில் இந்தியா (Team India) இரண்டாவது முறையாக 300 ரன்களை கடக்க முடிந்தது.
முன்னதாக, இன்றும் விராட் கோலிக்கும் (Virat Kohli) டாசிற்கும் இடையிலான துரதிர்ஷ்டம் தொடர்ந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து மீண்டும் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. எனினும், இந்தியாவின் துவக்கம் மிகவும் சுமாராகவே இருந்தது. முதல் பவர் பிளேவிலேயே துவக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவன் (4) மற்றும் ரோஹித் சர்மா (25) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். ஆனால் பின்னர் கோஹ்லி மற்றும் ராகுல் இடையில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஏற்பட்ட 121 ரன்களுக்கான பார்ட்னர்ஷிப் இந்தியாவை மிடில் ஓவர்களில் நிலையாக்கியது.
ALSO READ: Ind vs Eng: முதல் ODI போட்டியை 66 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
இதற்கிடையில், தனது 62 வது அரைசதத்தை அடித்தார். அதன் பிறகு ஆடிய ராகுல் மற்றும் பந்த் 80 பந்துகளில் 113 ரன்களை சேர்த்தனர். ராகுல் ஆட்டமிழந்தவுடன், ஹார்திக் பாண்ட்யாவும் ரிஷப் பந்தும் 13 பந்துகளில் மேலும் 37 ரன்களை சேர்த்தனர். ஹார்திக் 16 பந்துகளில் அதிரடியாக ஆடி 35 ரன்களை அடித்தார்.
இங்கிலாந்து அணியில் (England Team) டாம் கரன் மற்றும் ரிஸ் டாப்ளி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சாம் கரன் மற்றும் ராஷித் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ஒரு நாள் தொடரையும் இந்தியா கைப்பற்றிவிடும்.
ALSO READ: Ind vs Eng: விராட்டுடன் இணைந்து இந்தியாவை வெற்றிநடை போட செய்யும் வீரர் யார்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe