IND v SA: இன்று டி-20 போட்டி; மொஹாலி இந்தியா ஒருபோதும் தோற்றதில்லை

டி-20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2வது டி-20 போட்டி நடைபெற உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 18, 2019, 01:59 PM IST
IND v SA: இன்று டி-20 போட்டி; மொஹாலி இந்தியா ஒருபோதும் தோற்றதில்லை title=

13:54 18-09-2019
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர், அடுத்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், அனைத்து வீரர்களும் தங்கள் திறமையை காட்ட வேண்டும். இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த புதிய வியூகம் இந்திய அணி மேற்கொள்ள இருக்கிறது என்றும் கூறினார்.


10:00 18-09-2019
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் ஆட இந்திய அணி தயாராகி வருகிறது.

 

 


மொஹாலி: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டி-20 போட்டிக்கான காத்திருப்பு இன்று புதன்கிழமை (செப்டம்பர் 18) நிறைவடைய உள்ளது. இன்று இரு அணிகளும் இரவு 7 மணி முதல் மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மொத உள்ளது. 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான டி-20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அந்த போட்டியில் ஒரு பந்து கூட வீசமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1993 முதல் பஞ்சாப் பிந்த்ரா ஸ்டேடியத்தில் சர்வதேச போட்டிகள் விளையாடப்படுகின்றன. இந்த மைதானத்தில் முதல் போட்டி இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில் விளையாடிய முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இன்று மீண்டும் ஒரு போட்டி நடைபெற உள்ளது. அதிலும் இந்தியா வெற்றிக்கொடு நாட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற ஒட்டுமொத்த போட்டிகளைப் பற்றி பார்த்தால், இந்திய அணி 31 போட்டிகளில் (16 ஒருநாள், 13 டெஸ்ட், 2 டி-20 போட்டி) விளையாடியுள்ளது. அதில் 19 போட்டிகளில் வென்றுள்ளது. ஏழு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. மற்ற போட்டிகள் சமநிலையில் முடிந்தன.

இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய இரண்டு டி-20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை தோற்றதில்லை. 2009ல் இலங்கைக்கு எதிராகவும், 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெற்றி பெற்றுள்ளோம். அதில் முக்கிய அம்சன் என்னவென்றால், இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் டி-20 போட்டியை தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது. எனவே, முதல் வெற்றியை பதிவு செய்ய தென்னாப்பிரிக்கா அணி முயற்ச்சி செய்யும்.

மொஹாலி ஸ்டேடியத்தில் நடந்த டி-20 போட்டியில் அதிக ரன்கள் அடித்ததில் இந்திய அணியின் பெயரே முதலிடத்தில் உள்ளது. டிசம்பர் 12, 2009 அன்று இலங்கைக்கு எதிராக 211 ரன்கள் எடுத்துள்ளது. அதேபோல இந்த மைதானத்தின் குறைந்தபட்ச ரன்கள் பாகிஸ்தான் (158/5) எடுத்துள்ளது. 

மொஹாலியில் நடந்த டி-20 போட்டியின் தனிப்பட்ட வீரரின் அதிக ரன்கள் விராட் கோலியின் பெயரில் உள்ளது. 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் டி-20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னர் பெயரில் உள்ளது. அவர் இங்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Trending News