டி20 உலகக் கோப்பையில் 1 போட்டியில் மட்டுமே விளையாடிய உள்ள இந்திய வீரர்கள்!

தற்போது ஐசிசி டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2024, 08:05 AM IST
  • டி20 அணியில் இடம் பிடித்த வீரர்கள்.
  • ஒரு முறை மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது.
  • ஆனாலும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
டி20 உலகக் கோப்பையில் 1 போட்டியில் மட்டுமே விளையாடிய உள்ள இந்திய வீரர்கள்! title=

இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பது பலருக்கு கனவாக இருந்தாலும், ஐசிசி உலக கோப்பையில் இந்தியாவை பிரதிநிதிப்படுத்தி விளையாட வேண்டும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பலநாள் ஆசையாக இருக்கும். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அமைகிறது. தற்போது உலகம் முழுவதும் டி20 போட்டிகள் அதிக மக்களால் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை அணியில் இந்தியாவின் முக்கியமான சில வீரர்கள் கூட காம்பினேஷன் காரணமாக இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சிலருக்கு கூட இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களும், கேஎல் ராகுல் போன்ற முன்னணி வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் இடம் பெற்று இருந்தாலும் 1 டி20 உலக கோப்பையில் மட்டுமே விளையாடிய உள்ள வீரர்களை பற்றி பார்ப்போம். 

மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு செல்லுமா இந்திய அணி? சாம்பியன்ஸ் டிராபி தேதி இதுதான்!

தீபக் ஹூடா: சில காலம் மட்டுமே இந்தியாவின் டி20 அணியில் இடம் பெற்று இருந்தார் தீபக் ஹூடா. விராட் கோலியின் இடமான 3வது இடத்தில் விளையாடி வந்தார். ஒருசில போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடி இருந்தாலும், 2022ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 உலக கோப்பையில் விளையாடினார். 

வினய் குமார்: ஒருகால கட்டத்தில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளராக வினய் குமார் இருந்தார். இலங்கைக்கு எதிரான 2010 டி20 உலகக்கோப்பையில் விளையாடினார் வினய் குமார். அதற்கு பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அசோக் திண்டா: 2012 டி20 உலகக் கோப்பை அணியில் அசோக் திண்டா இடம் பெற்று இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா 2012 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

இஷான் கிஷான்: 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷான் விளையாடினார். ஆனால் அந்த போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மணீஷ் பாண்டே: 2016ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதியில் மணீஷ் பாண்டே இந்தியாவுக்காக விளையாடினார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் பிளெயிங் 11ல் இடம் பெற்று இருந்தாலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராகுல் சாஹர்: லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர் டி20 உலகக் கோப்பையில் 1 போட்டியில் மட்டுமே இந்தியாவிற்காக விளையாடி உள்ளார். விராட் கோலி தலைமையிலான 2021 டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருந்தார் ராகுல் சாஹர். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடினாலும் அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

மேலும் படிக்க | India vs Pakistan: டி20 உலக கோப்பையில் மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News