IPL 2021: இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) கொரோனா வைரஸ் உள் நுழைந்த பிறகு பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் வரும் நேரத்தில் BCCI பெரிய முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை மும்பைக்கு மாற்ற முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த பெரிய முடிவை BCCI விரைவில் எடுக்ககூடும்
ஈ.எஸ்.பி.என் கிரிகின்ஃபோவின் செய்தியின்படி, கொரோனா வைரஸ் (Coronavirus) அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு BCCI ஐ.பி.எல்லின் (IPL) மீதமுள்ள போட்டிகளை மும்பைக்கு மாற்றக்கூடும். ஐபிஎல் 2021 இல் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பரபரப்பு! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா!
ஐ.பி.எல்லின் 30 வது போட்டி ஒத்திவைக்கப்பட்டது
ஐபிஎல் 2021 இன் 30 வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே நடைபெற இருந்தது, ஆனால் திங்களன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டதால், உடனடியாக அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
மும்பையில் 3 மைதானங்களில் போட்டி நடத்தப்படலாம்
ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளை மும்பையின் வான்கடே ஸ்டேடியம், டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடத்தலாம் என்று தகவல்கள் வெளி வருகின்றன. இருப்பினும், இதுவரை பி.சி.சி.ஐ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2021 இன் 10 போட்டிகள் நடந்துள்ளன.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR