நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2024 கோப்பையை வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பல இளம் வீரர்களை தங்கள் அணியில் எடுத்துள்ளது. இந்நிலையில், சென்னைய அணியின் ரசிகர்களுக்கு சோகமான செய்தி தற்போது வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டெவான் கான்வே காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2023 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் டெவோன் கான்வே இருந்தார். மேலும் கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பை வென்றதில் இவரது பங்கும் அதிகம் உள்ளது. இந்நிலையில், விரலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் குறைந்தது எட்டு வாரங்களுக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
மேலும் படிக்க | ஐபிஎல்லில் விளையாடுவாரா ரிஷப் பந்த்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ள தகவலின் படி, "பிப்ரவரி 24 அன்று ஆக்லாந்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20ன் போது கான்வேக்கு இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. பல ஸ்கேன்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் குறைந்தது எட்டு வாரங்களுக்கு ஓய்வு தேவை" என்று கூறி உள்ளனர். மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் 2024 போட்டிகள் துவங்க உள்ள நிலையில், முதல் பாதியில் கான்வே விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் 2024ன் முதல் பாதிக்கான அட்டவணை மட்டும் வெளியாகி உள்ளது. மார்ச் 22 ஆம் தேதி முதல் ஆட்டம் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மோதுகிறது.
Opener Devon Conway will this week undergo surgery on the left thumb he damaged during the KFC T20I series against Australia.
Following several scans and specialist advice, the decision was made to operate on Conway with a likely recovery period of at least eight weeks.
— BLACKCAPS (@BLACKCAPS) March 3, 2024
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சென்னை அணியால் ரூ. 1 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் டேவோன் கான்வே. கடந்த ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஐபிஎல் 2023 இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார் கான்வே. குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி போட்டியில் கான்வே நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களின் உட்பட 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இது சென்னை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
கான்வே இடத்தில் ரச்சின் ரவீந்திரா
கான்வே இல்லாததால் ரச்சின் ரவீந்திராவின் சென்னை அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் 2024 ஏலத்தில் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் ரூ.1.80 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் ரச்சின், மேலும் ஐசிசியால் சிறந்த வீரருக்கான விருதையும் வென்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் உடன் இணைந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட வாய்ப்புள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் 3வது இடத்தில் விளையாடினார் ரச்சின் ரவீந்திரா.
மேலும் படிக்க | IND vs ENG: தொடரை வென்றாலும் 5வது டெஸ்ட் மிகவும் முக்கியம்! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ