ஐபிஎல் போட்டியிலும் என்டு கார்டுக்கு ரெடியாகும் இந்திய வீரர்

மோசமான ஃபார்மால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இந்திய வீரர் ஐபில் போட்டியிலும் ஒதுக்கப்பட்டுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2022, 12:37 PM IST
  • ஐபிஎல் போட்டியில் ரஹானே தடுமாற்றம்
  • மோசமாக விளையாடியதால் ஓரம்கட்டப்பட்டார்
  • இனி வாய்ப்பு கிடைத்து விளையாடுவது கடினம்
ஐபிஎல் போட்டியிலும் என்டு கார்டுக்கு ரெடியாகும் இந்திய வீரர் title=

2022 ஐபிஎல் தொடரின் 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் கேகேஆர் அணியில் இதுவரை இடம்பிடித்த வீரருக்கு இப்போட்டியில் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை.  தொடர்ச்சியாக மோசமாக விளையாடியதால், கேப்டன் ஸ்ரேயாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.

யார் அந்த வீரர்?

இந்திய அணியில் ஒரங்கட்டப்பட்ட அஜிங்கியா ரஹானேவுக்கு கொல்கத்தா அணி ஐபிஎல்லில் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வருவதால், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச் அணியில் சேர்க்கப்பட்டார். ரஹானே ரன்களை எடுக்க தடுமாறி வருகிறார். அதிக பந்துகளை எதிர்கொண்டபோதும், மிக சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால் கொல்கத்தா அணி இம்முடிவை எடுத்துள்ளது. 

மேலும் படிக்க | பட்லரை பாராட்டி அஸ்வினை மறைமுகமாக சாடிய யுவராஜ் சிங்

இனி வாய்ப்பு கடினம்

ஏற்கனவே இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்டுள்ள ரஹானே, ஐபிஎல் போட்டியிலும் இனி வரும் ஆட்டங்களில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. கொடுப்பட்ட வாய்ப்புகளை எல்லாம் வீண்டித்துவிட்டதால் இனி கொல்கத்தா அணி அவரை தொடக்க ஆட்டக்கார ராக பரிசீலிப்பது கடினம். மேலும், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தால், இந்திய அணிக்கான வாய்ப்பு பற்றி கொஞ்சம் யோசித்திருக்கலாம். இப்போது, அதற்கும் வழியில்லை.

டெல்லி அணியில் ரஹானே

கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய ரஹானே இரண்டு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த போட்டிகளிலும் மோசமாக விளையாடியதால் வெளியே உட்கார வைக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 9 போட்டிகளில் விளையாடி மொத்தம் 113 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுவரை 153 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரஹானே 3,941 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டுடன் இவருக்கான ஐபிஎல் வாய்ப்பும் முடிவுக்கு வந்துவிடும் என கருதப்படுகிறது. 

மேலும் படிக்க | சச்சின் காலில் விழுந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News