இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது.
2nd ODI. It's all over! India won by 6 wickets https://t.co/YEn4BQ8Sfv #AusvInd #TeamIndia
— BCCI (@BCCI) January 15, 2019
இப்போடியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் கேரி 18(27), அரோண் பின்ச் 6(19) ரன்களில் வெளியேற, அதிரடி நாயகன் மார்ஸ் சிறப்பாக விளையாடி 131(123) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக கெளன் மேக்ஸ்வெல் 48(37) ரன்கள் குவித்தார். ஆஸி., வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை குவித்தார், மொகமது ஷமி 3 விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து இந்தியா 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் 43(52), ஷிகர் தவான் 32(28) நிதானமான அட்டத்தினை வெளிப்படுத்தி வெளியேறினர், இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடி 104(112) ரன்கள் குவித்து அணியின் ரன்னை உயர்த்தினார். இவருக்கு துணையாக மகேந்திர சிங் தோனி மறுபுறம் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில் கோலி 104 ரன்களுக்கு வெளியேறினார். இவரை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 25(14), தோனியுடன் 55(54) கைகோர்த்தார். இருவரும் இறுதி வரை நின்று விளையாடி அணியினை வெற்றியடைய செய்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் கொண்ட தொடரில் இந்தியா 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 18-ஆம் நாள் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.