ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடர் பிரம்மாண்டமாக இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் என ஒரு பேட்டிங் பட்டாளமே இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சு லைன் அப் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. குறிப்பாக டெத் ஓவர்களில் வீசுவதற்கு சரியான பவுலர் அணியில் யாரும் இல்லை. இப்போதைய சூழலில் இளம் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒருவரை மட்டுமே நம்பியிருக்கிறது.
மேலும் படிக்க | இதெல்லாம் பிசிசிஐ தலைவராக கங்குலி செய்த சாதனைகளா?
புவனேஷ்வர் குமார் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்த்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை, மோசமாக பந்துவீசி வீண்டித்தார். அதனால் புவனேஷ்வர் குமாரை டெத் ஓவர்களில் வீசுவதற்கு ரோகித் சர்மா தயாராக இல்லை. ஆனால், உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பந்துவீசுவதற்கு அனுபவமும், திறமையும் வாய்ந்த பந்துவீச்சாளர் ஒருவர் தேவைப்படுகிறார் என உணர்ந்த இந்திய கிரிக்கெட் வாரியம், முகமது ஷமியை மீண்டும் அழைத்துள்ளது.
அவருக்கு கடந்த 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மோசமாக பந்துவீசியதால், இந்திய அணியின் 20 ஓவர் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். ஒருநாள் உள்ளிட்ட இந்திய அணிகளில் விளையாடி இருந்த முகமது ஷமி , பும்ராவுக்கு மாற்றான பந்துவீச்சாளராக 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகு வலி பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா விலகினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட முகமது ஷமி, ஆஸ்திரேலியா பறக்க இருக்கிறார்.
மேலும் படிக்க | கோலிக்கு கங்குலி செய்த துரோகம்! கங்குலிக்கு ஏற்பட்ட அதே நிலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ