இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா பரபரப்பு வெற்றி பெற்றது!
இப்போட்டியில் வெற்றிக்கு காரணம் புவனேஷ்குமார் மற்றும் தவான் என அனைத்து ஊடகங்களும் ப்ரகடணம் செய்து அவற்றிலேயே நேரம் கழித்து வந்தன. உன்மையும் அது தான், ஆனால் அதே வேலையில் முன்னாள் அணித்தலைவர் டோனி-யும் இந்த போட்டியில் குறிப்பிடத்தக்க ஓர் சதனை படைத்துள்ளார் என்பதினை சொல்ல மறந்துவிட்டது.
இந்த முதல் டி20 போட்டியினில், தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் ரீஜா ஹென்ட்ரிக்ஸ் கேட்ச் பிடித்து வெளியேற்றியதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கர்காராவின் சாதனையினை எட்டியுள்ளார் செய்துள்ளார்.
இந்த கேட்ச் ஆனது டோனியில் 134-வது டி20 கேட்ச் ஆகும். இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கர்காரா 254 ஆட்டங்களில் 133 கேட்சினை பிடித்துள்ளார். அதேவேலையில் டோனி 275 ஆட்டங்களில் 134 கேட்ச் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை அடுத்து இந்தியாவின் தினேஷ் கார்த்திக் 123 கேட்ச், பாக்கிஸ்தான் அணியின் கம்ரான் அக்மல் 115 கேட்ச், மேற்கிந்திய அணியின் ராம்தின் 108 கேட்ச்களுடனும் இச்சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.