PAK vs BAN Match Update: நடப்பு உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு ஏறத்தாழ முன்னேறிவிட்ட நிலையில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி ரேஸில் உள்ளன. அந்த வகையில் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 6இல் முதல் இரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அடுத்த நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து பின்தங்கியிருந்தது. வங்கதேசமோ முதல் போட்டியில் வென்று, அடுத்த 5 போட்டிகளில் தோல்வியைடந்து 9ஆவது இடத்தில் உள்ளது.
வங்கதேச அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற ஏதுவாக இருக்கும். அதேபோல, நடப்பு உலகக் கோப்பை தொடர் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற பாகிஸ்தான் அணியும் கடுமையாக மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும், இன்று பாகிஸ்தான் தனது பந்துவீச்சால் ஆதிக்கத்தை தொடர்ந்தது.
ஓப்பனர் லிட்டன் தாஸ், மிடில் ஆர்டரில் மஹமதுல்லா, ஷகிப் அல் ஹாசன், பின்வரிசையில் மெகதி ஹாசன் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை பெற்றனர். மற்ற 7 வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். மற்றொரு ஓப்பனர் டான்சித் ஹாசன் மட்டும் டக் அவுட்டானார். அதிகபட்சமாக மஹமதுல்லா 56 ரன்களையும், லிட்டன் தாஸ் 45 ரன்களையும், ஷகிப் அல் ஹாசன் 43 ரன்களையும் எடுத்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதன்மூலம், 45.1 ஓவர்களில் வங்கதேசம் 204 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பாகிஸ்தான் அணியில் ஃபக்கர் ஜமான் மற்றும் அப்துல்லா ஷஃபீக் ஓப்பனிங்கில் களமிறங்கி உள்ளனர்.
மேலும் படிக்க | உலகக் கோப்பையில் சீன்கள் மாறுது... அரையிறுதியில் காலடி வைக்கப்போவது யார் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ