கடைசி பந்தில் LSG வெற்றியும் அனுஷ்கா சர்மாவின் எதிர்வினையும் சமூக ஊடகங்களில் வைரல்

Sad Anushka Sharma After Watching IPL 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்விக்குப் பிறகு பெங்களூரில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் விரக்தி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 11, 2023, 03:04 PM IST
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்விக்குப் பிறகு அனுஷ்கா சர்மா
  • மகிழ்ச்சியிலிருந்து விரக்திக்கு செல்லும் அனுஷ்கா விராட் கோலி
  • பெங்களூரு போட்டியில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா
கடைசி பந்தில் LSG வெற்றியும் அனுஷ்கா சர்மாவின் எதிர்வினையும் சமூக ஊடகங்களில் வைரல் title=

பெங்களூரு: ஐபிஎல் 2023 போட்டியில் எல்எஸ்ஜிக்கு எதிராக ஆர்சிபி வெற்றிப் பெறத் தவறியதால் அனுஷ்கா ஷர்மாவும் பெங்களூரு ரசிகர்களும் திகைத்துப் போனார்கள். பாலிவுட் நட்சத்திரமும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, திங்களன்று எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபியின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டியைப் பார்க்க வந்திருந்தார்.

போட்டியின்போது, ஐபிஎல் 2023 இன் இரண்டாவது அரைசதத்தை கோஹ்லியுடன் சேர்த்து அனுபவித்த அனுஷ்கா மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார், ஆனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் தாக்குதல் அவரது மனநிலையை வெகுவாக மாற்றியது.

பெங்களூருவில் RCB அணியின், விராட் கோஹ்லி 44 பந்துகளில் 61 ரன்கள், கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 79 ரன்கள் மற்றும்  கிளென் மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 59 ரன்கள் என மொத்தம் 212 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க: ரோகித்துக்கு பாடம் கற்பித்த தோனி - மும்பையில் சம்பவம் செய்த சிஎஸ்கே
 
ஐபிஎல் 2023 LSG vs RCB

M. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் உள்ள பலரைப் போலவே, ஸ்டோனிஸ் மற்றும் பூரன் ஆகியோர் போட்டியின் இறுதிப் பந்தில் ஒரு அதிசய வெற்றியைப் பெற்ற பிறகு அனுஷ்காவும் திகைத்துப் போனார். ஒரு விக்கெட் வெற்றியின் மூலம் லக்னோ அணி, IPL 2023 புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியது. 

இந்த பந்தயத்திற்குப் பிறகு அனுஷ்காவின் எதிர்வினை சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. RCB LSG-யிடம் தோற்ற பிறகு அனுஷ்கா ஷர்மாவின் எதிர்வினைகளை இங்கே பாருங்கள்...

திங்களன்று டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த நான்காவது வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றார். எல்எஸ்ஜிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியின் போது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

மேலும் படிக்க: IPL 2023: ஒரே நாளில் 3 பேரிடம் அடுத்தடுத்து மாறிய ஆரஞ்சு தொப்பி

ஐபிஎல் 2023இல் விராட் கோலி

ஐபிஎல் 2023ல் இதுவரை மூன்று போட்டிகளில் 82.00 சராசரியுடன் 164 ரன்களையும், இரண்டு அரை சதங்களுடன் 147 ஸ்டிரைக் ரேட்டையும் அடித்துள்ளார். இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோராக உள்ளது.

டி 20 போட்டிகளில் இதுவரை விராட் கோலி மொத்தம் 362 போட்டிகளில் விளையாடி 345 இன்னிங்ஸ்களில் 41.11 சராசரி மற்றும் 133.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 11,429 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட்டின் குறுகிய வடிவத்தில் ஆறு சதங்கள் மற்றும் 86 அரை சதங்கள் அடித்துள்ளார் விராட் கோலி.

டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 115 போட்டிகள் மற்றும் 107 இன்னிங்ஸ்களில் 52.73 சராசரி மற்றும் 137.96 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,008 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் டாப் ரன்னர்களின் வரிசை:

பின்வருமாறு: மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் (463 போட்டிகளில் 14,562 ரன்கள் சராசரியாக 36.22), பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் (510 போட்டிகளில் 36.00 சராசரியில் 12,528 ரன்கள். ), மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் (625 போட்டிகளில் 31.29 சராசரியில் 12,175 ரன்கள்), விராட் கோலி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் (382 போட்டிகளில் 33.80 சராசரியில் 11,392 ரன்கள்).

மேலும் படிக்க: ஒரு டீமையும் விட்டு வைக்காத விராட் கோலி - அடுத்தடுத்து அரைசதம் அடித்து அபார சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News