RIP Symonds: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவஞ்சலி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 15, 2022, 11:45 AM IST
  • ஆஸ்திரேலிய ஆல்ரவுண்ட் கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
  • கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்
  • கார் விபத்தில் பலி
RIP Symonds: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவஞ்சலி title=

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லி அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவருக்கு நினைவாஞ்சலி.

சைமண்ட்ஸ் "அவரது சர்வதேச விளையாட்டு வாழ்க்கையின் உச்சக் காலத்தில் ஒரு வழிபாட்டு நாயகனாகவும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் கண்ட மிகவும் திறமையான ஆல்ரவுண்டர்களில் ஒருவராகவும் இருந்தார்.

சைமண்ட்ஸின் மரணச் செய்தியை  கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது இணையதளத்தில் வெளியிட்டது, சனிக்கிழமை (2022, மே 14) இரவு நடைபெற விபத்து பற்றிய விவரங்களுடன் போலீஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த துயரமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது

குயின்ஸ்லாந்தை சேர்ந்த சைமண்ட்ஸ் எண்ணற்ற ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர். சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்களை அடித்தார், ஆனால் அவர் ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர்கள் நிபுணராக அறியப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்காக 198 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய சைமண்ட்ஸ், இரண்டு உலகக் கோப்பைகளை வென்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சைமண்ட்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளராக அவதாரம் எடுத்தார்.

cricket

ஆஸ்திரிலேயாவின் பிரபல கிரிக்கெட்டர்கள் ஷேன் வார்ன் மற்றும் ராட் மார்ஷ் ஆகியோரின் சமீபத்திய மரணத்திற்குப் பிறகு இது விளையாட்டிற்கு மற்றொரு சோகமான அடியாகும்.

1975 ஜூன் 9ம் தேதியன்று பிறந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கரீபியன் பின்னணியைக் கொண்டவர். குழந்தையாக இருந்தபோது ஒரு ஆங்கில தம்பதியால் தத்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க | மற்றொரு பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விபத்தில் மரணம்!

தனது தாய் நாட்டிற்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடினார்
சைமண்ட்ஸ் குயின்ஸ்லாந்திற்காக தனது முதல் அறிமுகத்தில் தான் பிறந்த நாட்டிற்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடினார்.  இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தனது முதல் முதல் தர சதத்தை அடித்து நொறுக்கினார்.

Gloucestershire இல் நடைபெற்ற போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 16 சிக்ஸர்களை அடித்து ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தார், இது கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகசாதனையாக இருந்தது

சைமண்ட்ஸின் அதிர்ச்சி மரணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல் செய்திகள் வந்து குவிந்துக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | சென்னை அணியில் இருந்து தோனி வெளியேறினால்....பாக்.வீரரின் ஆருடம்

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், ஆண்ட்ரூவின் மரணத்தை தாங்க முடியாத இழப்பு என்று சொல்லி வருத்தம் தெரிவித்தார். சைமண்ட்ஸ் பந்தை நீண்ட தூரம் அடிக்கும் சைமண்ட்ஸ், தனது வாழ்க்கையை விரைவில் முடித்துக் கொண்டார் என்றும் பார்டர் கூறினார். 

அவர் ஒரு விதத்தில், கொஞ்சம் பழைய பாணியிலான கிரிக்கெட் வீரர், ஆனால் சாகசக்காரர், மீன்பிடிப்பது அவருக்கு பிடித்த பொழுதுபோக்கு. அதைத்தவிர, நீண்ட தூர நடைபயணம், பயணங்கள் ஆகியவை அவருக்கு பிடித்தவை என்று கூறிய ஆலன் பார்டர், மக்கள் அவரது நிதானமான பாணியை விரும்பினர் என்றும் தெரிவித்தார்.

அவரது பொழுதுபோக்கு விருப்பமான மீன்பிடிக்கும் பழக்கம் சைமண்ட்ஸின் கிரிக்கெட் வாழ்க்கையின் பிற்பகுதியில் பின்னடைவை ஏற்படுத்தியது. 2008 ஆம் ஆண்டில், வங்காளதேசத்திற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் தொடரை தவறவிடுவதற்கு அதுவே காரணமாக் ஐருந்தது. 

2009 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, மதுபானம் தொடர்பான விதிமீறல்களுக்காக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் புறக்கணிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | ராயுடு ஓய்வா... என்ன சொல்கிறது சென்னை அணி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News