நவம்பர் 22-ஆம் தேதி ஈடன் கார்டனில் இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது!
இந்த டெஸ்ட் போட்டியானது ஒரு இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
முன்னதாக., இரு நாடுகளுக்கிடையில் முதல் நாள் / இரவு டெஸ்ட் விளையாட பங்களாதேஷ் ஒப்புக் கொள்ளும் என்று திங்களன்று (அக்டோபர் 28) BCCI தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக BCB தலைவர் நஸ்முல் ஹாசனுடன் பேசியதாகவும், BCB பகல்-இரவு டெஸ்ட் விளையாடத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இறுதி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு வீரர்களுடன் இது குறித்து விவாதிக்க விரும்புவதாகவும் கங்குலி குறிப்பிட்டிருந்தார்.
தனது பங்கிற்கு, BCB-யின் கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைவரும், முன்னாள் கேப்டனுமான அக்ரம் கான், சில வீரர்களுக்கு இளஞ்சிவப்பு பந்துடன், விளக்குகளின் கீழ் விளையாடும் யோசனை பிடிக்காது என்று கூறியிருந்தார், ஆனால் BCB தனது வீரர்களை சமாதானப்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இளஞ்சிவப்பு பந்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பகல் / இரவு டெஸ்ட், எவ்வாறாயினும் ஒரு ஆக சிறந்த முயற்சியாக இருக்கும் என அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
எந்த நேரத்தையும் வீணாக்காமல் தயாரிப்பு நடைபெறுவதற்கு கங்குலி BCB-யிடம் தங்கள் முடிவைப் பற்றி விரைவில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனிடேயே, BCCI திட்டமிட்ட நவம்பர் 22-ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்தியாவின் புகழ்பெற்ற ஒலிம்பியர்களான அபிநவ் பிந்த்ரா, எம் சி மேரி கோம் மற்றும் பி வி சிந்து ஆகியோரை வாழ்த்த கங்குளி திட்டமிட்டிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.