ருதுராஜை ஏன் அணியில் எடுக்கவில்லை? கவுதம் கம்பீர் கொடுத்த விளக்கம்!

இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்காக இன்று இந்திய அணி புறப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 22, 2024, 12:30 PM IST
  • அணியில் 15 பேரை மட்டுமே எடுக்க முடியும்.
  • சில வீரர்கள் தங்களது இடத்தை இழக்க நேரிடும்.
  • ஜடேஜாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
ருதுராஜை ஏன் அணியில் எடுக்கவில்லை? கவுதம் கம்பீர் கொடுத்த விளக்கம்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இன்று முதல் பதவியேற்றுள்ளார். இவரின் தலைமையில் முதல் தொடர் இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ளது. ஜூலை 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. இதற்கான அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் பல சர்ச்சைகள் எழுந்தன. முதலாவதாக ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் சுப்மான் கில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்திய தொடர்களில் சிறப்பாக விளையாடிய சில வீரர்கள் இலங்கை தொடரில் இடம் பெறாதது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!

சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. சுப்மான் கில்லை விட அதிக ரன்கள் அடித்துள்ள ருதுராஜ் கெய்க்வாடிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்தும் சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்திற்காக இன்று இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது. ​​சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ருதுராஜ், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் டி20 தொடரில் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், "தகுதியான அனைத்து வீரர்களையும் 15 பேர் கொண்ட அணியில் சேர்ப்பது கடினம். அனைவரும் சிறந்த வீரர்களாக இருப்பது இந்தியாவின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது. அந்த வீரர்களுக்கு பதில் அணியில் யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அவர்கள் தகுதியற்றவர்கள் என்றால் சொல்ல முடியாது. எடுத்துக்காட்டாக ரிங்கு சிங் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறவில்லை. அது அவருடைய தவறு இல்லை. 15 பேரில் ஒருசிலரை தான் எடுக்க முடியும்" என்று அகர்கர் தெரிவித்தார். ஒருநாள் தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அகர்கர், விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் அணியில் எடுத்ததற்கு விளக்கம் அளித்தார். இந்த இரண்டு வீரர்களுக்கும் சஞ்சு சாம்சன் ஒரு பேக்அப்பாக மட்டுமே கருதப்படுவார் என்றும்  கூறினார்." ரிஷப் பந்த் இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார், காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இன்னும் நிறைய விளையாட வேண்டும். கேஎல் ராகுல் ஒருநாள் உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே ஒருசில வீரர்கள் தங்களது இடத்தை தவறவிட வேண்டியதாக உள்ளது. எனவே சஞ்சு போன்ற சீனியர் வீரர்களும் காத்திருக்க வேண்டி உள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தில் ரவீந்திர ஜடேஜா ஏன் எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்று அகர்கர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் டி20 அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமது சிராஜ்.

இந்தியாவின் ஒருநாள் அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல் , கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

மேலும் படிக்க | இந்த நடிகையை டேட்டிங் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா? வைரல் நடனமும், லேட்டஸ்ட் அப்டேட்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News