ஜிம்பாப்வேயில் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. ஜூலை 20ஆம் தேதி துவங்கிய அந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை படித்த டர்பன் குவாலண்டர்ஸ் மற்றும் ஜோகனஸ்பர்க் பஃபலோஸ் ஆகிய அணிகள் குவாலிபயர் 1 போட்டியில் மோதின. ஹராரேயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டர்பன் அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!
அதிகபட்சமாக ஆண்ட்ரூ பிளேட்சர் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 39 ரன்களும், ஆசிப் அலி 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்களும் குவித்தனர். நிக் வெல்க் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 விளாசினார். ஜோபரக் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேஸிங்கை நோக்கி களமிறங்கிய ஜோபர்க் அணியில் ஓப்பனிங் இறங்கிய முகமது ஹபீஸ் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 ரன்கள் விளாசி அவுட்டானார். பின் வந்த வீரர்கள் யாரும் சோபிக்காததால் 5.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.
அப்போது மிடில் ஆர்டரில் களமிறங்கிய யூசுப் பதான், பந்துகளை அடித்து துவம்சம் செய்தார். சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய அவர், முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்தார். முகமது ஆமீர் வீசிய 8-வது ஓவரில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த சிக்சர்களை அடித்த அவர் 3வது பந்திலும் சிக்ஸர் அடித்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் குவித்தார்.
(@viratkohli_18_0) July 28, 2023
அடுத்து பந்துவீச வந்த பிராட் எவான்ஸ் வீசிய ஓவரில் 2 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி பறக்க விட்டு அரை சதம் அடித்தார். கடைசி ஓவரில் ஜோபர்க் அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது எதிர்புறம் இருந்த வங்கதேச வீரர் முஸ்பிக்கர் ரஹீம் முதல் பந்திலேயே சிங்கிள் எடுத்து கொடுத்தார். 2வது பந்தில் சிக்சர் அடித்த பதான் 3வது பந்தில் பவுண்டரியும் 4வது பந்தில் சிக்ஸரும் விளாச, 5வது பந்தில் மீண்டும் பவுண்டரியும் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதி வரை களத்தில் இருந்த அவர், 26 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.
மேலும் படிக்க | ODI போட்டிகளில் சிறந்த பேட்டிங் ஜோடிகள்! உலக கிரிக்கெட்டின் மன்னன் முதல் சச்சின் வரை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ