திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லி அதிமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2022, 12:49 PM IST
  • அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
  • திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் பூந்தமல்லி குமணஞ்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
  • தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது: பென்ஜமின்.
திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின்  தலைமையில் ஆர்ப்பாட்டம் title=

பூவிருந்தவல்லியில் திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் செத்துவரி உயர்வு, மின் கட்டணம்  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் பூந்தமல்லி குமணஞ்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

பூந்தமல்லி அதிமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேசிய பென்ஜமின், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் சொத்து வரி ஏற்றப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, சொத்துவரி அதிகமாக ஏற்றப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் தமிழக அரசின் காலை உணவு திட்டம்! 

தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் முதியோர் உதவி திட்டத்தை முடக்கி திமுக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்றும், பூந்தமல்லி நகரத்தில் தண்ணீர் தேங்காத காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் காலத்தில் கட்டப்பட்ட கால்வாய்கள் தான் காரணம் என்றும் தெரிவித்தார். 

மேலும், மாதா மாதம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என பொய் வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்றார். இறுதியாக 'அடிக்கடி மின்தடைக்கு காரணம் கேட்டால் அணில் கதை' என அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.

மேலும் படிக்க | ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News