பங்குனி மாதம் தொடங்கிது முதல் தமிழகத்தில் வெயில் பொளந்து கட்டி அடிக்கிறது. சித்திரை தொடங்கி மே முதல் தேதிகளில் ஆரம்பித்த கத்திரி வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மதிய வேளைகளில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்தது. உச்சகட்டமாக வேலூரில் 100 டிகிரியை தாண்டி சாதனை படைத்தது வெயில்.
இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக ஞாயிற்றுக் கிழமை முதல் சாந்தமான வானிலை காணப்படுகிறது. மேகமூட்டத்துன் இருந்த வானிலையால் பல நாட்கள் கழித்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் செவ்வாய்க் கிழமை சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. குளுகுளு என்று மாறிய சென்னையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் படிக்க | Viral Video: ரூ.400 தரேன் வேலைக்கு வர்றியா... என் கூட பிச்சை எடு ரூ.2000 கிடைக்கும்!
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக வங்கக் கடலில் மய்யம் கொண்டிருந்த அசானி புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இன்று காலை நிலவரப்படி புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மசூலிப்பட்டினத்திற்கு மேற்கே நிலவுகிறது. இது மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயல் கரையைக் கடந்ததன் காரணமாக குளுகுளு என்று இருந்த சென்னையில் வெயில் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வெயில் தொடங்கி புயலுக்கு முன் இருந்த நிலை மீண்டும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்னும் 10 முதல் 15 நாட்களுக்கு வெயில் பட்டையைக் கிளப்பப் போகிறது. ஜூம் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை வெயில் அதிகமாகத்தான் இருக்கும் என்பது வரலாறு.
மேலும் படிக்க | பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி, திருநங்கை : வெளுத்துவிட்ட போலீஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR