தஞ்சையில் போட்டியிடும் தமாகாவுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Last Updated : Mar 29, 2019, 05:17 PM IST
தஞ்சையில் போட்டியிடும் தமாகாவுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது.

அந்தவகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

More Stories

Trending News