‘பாஜக தமிழ் கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் எதிரி’ ஸ்டாலினின் காட்டமான பதில்!!

திமுக ஒரு ஜனநாயகக் கட்சி என்று வலியுறுத்திய ஸ்டாலின், அது வளர்ச்சி மற்றும் தேசிய நலன்களை நோக்கி செயல்படுகிறது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2020, 05:01 PM IST
  • பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் சிலர், தேசிய உணர்விற்கு எதிராக மக்களைத் தூண்டுவதாகக் கூறியுள்ளார்.
  • பாஜக இந்தியாவை அறிவிக்கப்படாத அவசரநிலைக்கு தள்ளியுள்ளது – ஸ்டாலின்.
  • பாஜக, நாட்டின் ஒற்றுமைக்கும் நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானது என்று ஸ்டாலினின் அறிக்கை கூறியுள்ளது.
‘பாஜக தமிழ் கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் எதிரி’ ஸ்டாலினின் காட்டமான பதில்!! title=

பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா (JP Nadda), தமிழகத்தில் சிலர், தேசிய உணர்விற்கு எதிராக மக்களைத் தூண்டுவதாகவும், தேசத்தின் நலனுக்காக செயல்படாதவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் கருத்து வெளிட்டதையடுத்து, திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எம்.கே.ஸ்டாலின் (MK Stalin) பாஜக-வை சரமாரியாகத் தக்கியுள்ளார். பாஜக “தமிழ் கலாச்சாரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் எதிரி" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் இணைய வழி செயற்குழு கூட்டத்தில் திங்களன்று உரையாற்றிய ஜே.பி.நட்டா, 2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிக்கு உரிய பதில் அளிக்குமாறு தனது கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். திமுக எப்போதும் “தேசத்திற்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டுகிறது”, “தேச முன்னேற்றத்திற்கு விரோதமாக செயல்படுகிறது” என்று நட்டா குற்றம் சாட்டினார்.  

அயோத்தியில் ராமர் கோயில் வருவது, ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது ஆகியவை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே இந்தியா என்பதை எடுத்துக்காட்டும் விஷயங்கள் என்பதை கட்சி உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று நட்டா தெரிவித்தார்.

திமுக (DMK) தலைவர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், பா.ஜ.க நாடு முழுவதும் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையில் செயல்களை செய்கிறது என்றும், பா.ஜ.க.வின் கைப்பாவை அதிமுக (ADMK) அரசாங்கத்தின் பின்புலத்தோடு, அக்கட்சி தமிழகத்தில் (Tamil Nadu) திமுகவை சீண்டிப்பார்க்கிறது என்றும் கூறி, தேசிய ஆளும் கட்சியை திமுக தலைவர் கண்டித்துள்ளார்.

திமுக ஒரு ஜனநாயகக் கட்சி என்று வலியுறுத்திய ஸ்டாலின், அது வளர்ச்சி மற்றும் தேசிய நலன்களை நோக்கி செயல்படுகிறது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

"எங்கள் கட்சி அவசரநிலைக்கு எதிராக போராடியது. மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டில் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காகவும் நாங்கள் எப்போதும் பணியாற்றுகிறோம். ஆனால் பாஜக (BJP) இந்தியாவை அறிவிக்கப்படாத அவசரநிலைக்கு தள்ளியுள்ளது. இதில் மாநிலங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. நாட்டின் பன்முகத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது”என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ALSO READ: கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை Neet, JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முன்னாள் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதையும், சமூக ஆர்வலர்கள் மிரட்டப்படுவதையும், அரசியல் எதிரிகள் தேச விரோதிகளாக முத்திரை குத்தப்படுவதையும் ஸ்டாலின் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.  இந்தியில் பேசாததால், சமீபத்தில், திமுக எம்பி கனிமொழி ஒரு இந்தியரா என கேட்கப்பட்டதையும், இந்தி தெரியாதவர்கள் ஒரு யோகா வெபினாரிலிருந்து அகற்றப்பட்டதையும் ஸ்டாலின் நினைவுபடுத்தினார்.

"தமிழ்நாட்டிலும் அரசியல் தலைவர்களை வாங்க முயற்சிக்கும் பாஜக, நாட்டின் ஒற்றுமைக்கும் நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானது" என்று ஸ்டாலினின் அறிக்கை கூறியுள்ளது.

ALSO READ:ஆயுஷ் செயலாளர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் : ஸ்டாலின் காட்டம்!!

Trending News