தமிழ்நாடு தேச விரோத மக்களுக்கு “தங்குமிடம்”: பாஜக தலைவர் J P Nadda சர்ச்சை

தேச விரோத மக்களுக்கு தமிழகம் தங்குமிடம் என்று பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா கூறிய விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2020, 09:56 PM IST
தமிழ்நாடு தேச விரோத மக்களுக்கு “தங்குமிடம்”: பாஜக தலைவர் J P Nadda சர்ச்சை title=

சென்னை: தமிழகத்தை தேச விரோத மக்களுக்கு "தங்குமிடம்" என்று அழைத்த பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா (J P Nadda), மாநில நிர்வாகமும் திமுகவும் நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு தங்குமிடம் அளித்து வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படும் அத்தகைய நபர்களுக்கு பொருத்தமான பாடம் புகட்டுவதில், நாம் எச்சரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று பாஜக (BJP) மாநில செயற்குழு கூட்டத்தில் வீடியோ மூலம் உரையாற்றிய நட்டா கூறினார். 

இரு கட்சிகளுக்கிடையிலான (DMK vs BJP) போட்டி காரணமாக திமுகவுக்கு எதிரான தாக்குதல் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிமுக (AIADMK) அரசாங்கத்தின் மீதான தாக்குதல் மிக ஆச்சரியமாக இருந்தது.

முருக பகவனுக்கு எதிரான கருப்பர் கூட்டத்தின் (Karuppar Koottam) சர்ச்சைக்குரிய வீடியோவைப் பற்றி அவர் குறிப்பிட்டு பேசினார். கட்சியின் மாநில பிரிவு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமும், சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து மாநில மக்களுக்கு அறிவூட்டுவதன் மூலமும் தேசியவாத உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தியது என்றார். 

ALSO READ | ‘பாஜக தமிழ் கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் எதிரி’ ஸ்டாலினின் காட்டமான பதில்!!

தமிழ்நாடு புரட்சியாளர்களின் நிலம் என்றும், உலகப் புகழ்பெற்ற தொழில்முனைவோர் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல்வேறு வகையான நிர்வாகத்திறன் உள்ள மாநிலம் என்றும், மாநிலத்தில் உள்ள நிர்வாகமும் அரசியல் கட்சிகளும், பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார். அவர்களுக்கு எதிராக வலிமை பெற வேண்டும் எனவும் கூறினார்.

திமுக மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட ஜே.பி. நட்டா, "திமுக எப்போதும் தேச விரோத (Anti-National) உணர்வுகளைத் தூண்டுகிறது," என்று அவர் கூறினார். தேசிய பிரதான அமைப்புகளில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எப்போதுமே நாட்டை சீர்குலைக்கும் நோக்கங்களுக்காகவே இருந்தன என்று அவர் குற்றம் சாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஒரு மாற்றத்துக்கான தலைவர் என பாராட்டிய நட்டா, பிரதமர் தமிழகத்தின் எதிர்கால நலனுக்கான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார். தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய ஆழமான புரிதலைப் பெறுமாறு நட்டா தனது கட்சி ஆட்களை கேட்டுக்கொண்டார். 

ALSO READ | 2021 தேர்தல்களில் பாஜக கூட்டணிக்கும் திமுக-வுக்கும்தான் போட்டி: வி.பி.துரைசாமி

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு, விவசாயிகள், தொழில்முனைவோர், தலித்துகள் மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார். 

தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு சாவடிக்கும் பாஜகவின் சாவடி அளவிலான செயல்பாட்டை வலுப்படுத்தவும், வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கவும் கட்சி மாநில தலைமைக்கு அவர் அறிவுறுத்தினார்.

Trending News