சென்னை: தமிழகத்தில் (Tamil Nadu) பாஜகவின் வளர்ச்சி மாநிலத்தின் அரசியல் தளத்தை மாற்றியுள்ளது. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தல் பாஜக-தலைமையிலான கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையிலான போட்டியாகத்தான் இருக்கும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி (V P Duraisamy) புதன்கிழமை கூறினார்.
மேலும், ஒரு தேசிய கட்சியாக இருப்பதால், 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை வழிநடத்த பாஜகவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் பாஜக (BJP) வியத்தகு முறையில் வளர்ந்துள்ளது. முன்னதாக இங்கு அஇஅதிமுக-வுக்கும் திமுக-வுக்கும் இடையில் போட்டி இருந்தது. ஆனால், வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில், போட்டி திமிக-வுக்கும் (DMK) பாஜக தலைமையிலான கூட்டணிக்கட்சிகளுக்கும் இடையில்தான் உள்ளது." என்று துரைசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நகரத்தின் ஆயிரம் விளக்குகள் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ செல்வம், கடந்த வாரம் டெல்லியில் பாஜக கட்சித் தலைவர் ஜே பி நட்டாவைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர் திராவிடக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியுடனான இணைப்புகளை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும், முருகக் கடவுளை புகழும் 'கந்த சஷ்டி கவத்தை' அவதூறாக பேசிய யூடியூப் குழுவொன்றை விமர்சிக்குமாறும் திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை இவர் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி குறித்து கேட்டதற்கு, துரைசாமி, "ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும். எங்கள் கூட்டணி நிச்சயமாக தேர்தல்களில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்கும்" என்றார். கூட்டணியை எந்தக் கட்சி வழிநடத்தும் என்று கேட்டபோது, துரைசாமி, "நிச்சயமாக பாஜக," என்று சுட்டிக் கொன்றார்.
"ஒரு தேசிய கட்சியாக இருப்பதால், மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை வழிநடத்த பாஜகவுக்கு உரிமை உண்டு. ஆனால் இது எனது தனிப்பட்ட பார்வை. கூட்டணி குறித்து கட்சித் தலைமை ஒரு முடிவை எடுக்கும்" என்று மே மாதம் கட்சியில் சேர்ந்த முன்னாள் திமுக தலைவரான துரைசாமி மேலும் கூறினார்.
ALSO READ: இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் OBC & SC/ST பிரிவினரின் உரிமைகள் பறிப்பு: MKS
துரைசாமிக்கு பதிலளித்த அதிமுக (ADMK), இதுபோன்ற அறிக்கைகள் பாஜக மாநில பிரிவுத் தலைவர் எல் முருகனால் அளிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு மதிப்பு இருக்கும் என்று கூறியது. "முருகன் இதைச் சொன்னாரா?" என்று மூத்த தலைவரும், மீன்வளத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார் (D Jayakumar) கேட்டார்.
"முருகன் மாநில பாஜக தலைவர். ஜனநாயக அமைப்பில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்க முடியும். அது கட்சியின் கருத்தாக இருந்தால் அதை முருகன் தெளிவுபடுத்தட்டும். அப்போது நாங்கள் பதிலளிப்போம்" என்று துரைசாமியின் கருத்துக்கள் குறித்து கேட்டபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ALSO READ: ADMK அரசு கோமா நிலைக்கு சென்றுவிட்டது: ஸ்டாலின் கடும் சாடல்..!