'கன்னிப்பேச்சை' 'அறிமுகப்பேச்சாக' மாற்ற வேண்டும்: சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் கோரிக்கை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசும் எம்எல்ஏக்களை கன்னிப் பேச்சு என்று கூறுவர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 12:37 PM IST
'கன்னிப்பேச்சை' 'அறிமுகப்பேச்சாக' மாற்ற வேண்டும்: சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் கோரிக்கை title=

கடந்த 13 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 

அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். 

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெறுகிறது.  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு தேவையற்ற பொய் வழக்குகளை போட முயற்சிப்பதாக கோரி அமளியில் ஈடுபட்டு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர். 

ALSO READ:  Religion vs Priest: அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதால் மதம் வளருமா? மதம் பிடிக்குமா?

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசும் எம்எல்ஏக்களை கன்னிப் பேச்சு என்று கூறுவர்.  அவ்வாறு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்துப் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்ற பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் (Vanathi Srinivasan) இன்று பேசினார்.  

சட்டப்பேரவையில் இன்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், " முதல் முறையாக சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்களளது பேச்சை, கன்னிப்பேச்சு என்று சொல்லாமல் முதல் பேச்சு அல்லது அறிமுக பேச்சு என்று கூறினால் நாகரிகமாக இருக்கும். கன்னி என்கின்ற வார்த்தை இளம் வயது பெண்மையை குறிக்கும் வார்த்தை,  என்னைப் பொறுத்தவரை ‘அறிமுகப்பேச்சு’ என குறிப்பிட்டால் நாகரீகமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.  

இதற்கு முன் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) தனது முதல் உரையை ஆற்றினார்.  அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்றும், நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.  

"தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலையான பிரசனை நீட், அனிதா தொடங்கி பல மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர், சுபஷிரி, மோதிலால், ஆதித்யா, கீர்த்தனா என 16 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கலைஞர், ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வராத நீட் தேர்வு கடந்த ஆட்சிககலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் நீட் தேர்வு வந்தது. ஆனால் திமுக ஆட்சியில் ராஜன் தலைமையில் குழு அமைத்து கருத்து கேட்கப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.  

ALSO READ:ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News