தேர்தல் நடப்பதற்குள் அரை டஜன் திமுகவினர் ஜெயிலுக்கு போவார்கள்... ஹெச்.ராஜா ஆருடம்!

BJP H Raja Slams DMK: தேர்தல் வருவதற்குள் அரை டஜன் மந்திரிகள் உள்ளே போனாலும் போவார்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2024, 11:16 AM IST
  • பாஜக மட்டும்தான் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி - ஹெச்.ராஜா
  • விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன் - ஹெச்.ராஜா
  • சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது எல்லாம் வெறும் கற்பனை - ஹெச்.ராஜா
தேர்தல் நடப்பதற்குள் அரை டஜன் திமுகவினர் ஜெயிலுக்கு போவார்கள்... ஹெச்.ராஜா ஆருடம்!

BJP H Raja Slams DMK: பாரதிய ஜனதா கட்சியின் மாநில நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Add Zee News as a Preferred Source

ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "நாடாளுமன்ற தேர்தலையொட்டி எந்தெந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது பற்றி பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் குறிப்புகள் அளிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் அல்லது இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும்.

மக்களவை தேர்தல் எப்போது?

ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆயிரம் பேசினாலும் அயோத்தி ராம ஜென்ம பூமியில் பாஜகவில் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்ற அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பாஜக உதவிகள் செய்வோம் என்று கூறியதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முழு மன திருப்தியோடு நிறைவேற்றி உள்ளது. இதன் காரணமாக மக்களிடையே நல்ல எண்ணம் உருவாகி இருக்கிறது.

மேலும் படிக்க | திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீரழிகிறது - வானதி ஸ்ரீனிவாசன்

மேலும் மத்திய அரசின் செயல் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த பணிகளை இங்கு (தமிழ்நாடு) பார்த்தோம். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஒரு மாறுபட்ட சூழ்நிலைகளாக இந்தத் திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இது பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை.

'கிராமம் செல்வோம்'

எனவே இவற்றையெல்லாம் பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டையும் அணுக வேண்டியது எப்படி என்பது பற்றி இன்றைய தினம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இன்றைய தினத்தில் இருந்தே கிராமம் செல்வோம் நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது. ஒரு வார காலத்திற்குள் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசியலுக்கு திசை கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அது அத்வானி. பாஜகவை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில் மகத்தான பங்கு வகித்தவர் அத்வானி. அவர் உண்மையாகவே ரத்தினமாக இருந்தார்.

அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதாக உலகிற்கு அறிவித்துள்ளது. மேலும் கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருக்கின்ற பணியாளர்கள் இதன் மூலம் உற்சாகம் பெற்று தேர்தல் பணியாற்ற தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். 

மேலும் படிக்க | 'சின்னவர்', 'வாழும் பெரியார்' பட்டப்பெயர்களே வேண்டாம் - அமைச்சர் உதயநிதி அன்பு கட்டளை

INDIA கூட்டணிக்கு முற்றுப்புள்ளி

மேலும், INDIA கூட்டணியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது குறித்து கருத்து கேட்டதற்கு, "அப்படி ஒரு கூட்டணி இல்லை என்பதில் ஒரு பெரிய புரிதல் நமக்கு வராமல் இருந்தது. I.N.D.I.A என்ற புள்ளி வைத்த கூட்டணியாக இருந்ததை தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அதன் கண்வினியரே அதில் இல்லை என்ற அளவிற்கு இருக்கிறது என்றால் அதற்கு குறிக்கோள் இல்லாமல் அமைகின்ற கூட்டணிகள் நிலைக்க முடியாது என்பதுதான் காரணம்.

மோடியை நீக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாக வைத்திருந்தனர். அதை தவிர்த்து வேறு ஏதேனும் குறிக்கோள்கள் இருக்கிறதா, அஜண்டா ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை. அதனால் தற்பொழுது அந்த கூட்டணியே திசை தெரியாமல் போய் உள்ளது. 

மேலும் அந்த கூட்டணியில் இருக்கும் முக்கியமான கட்சியின் தலைவரான மம்தாவே காங்கிரஸ் கட்சியினர் 40 சீட்டுகள் கூட ஜெயிக்க மாட்டீர்கள் எனக் கூறுகிறார், என்றால் அவர்களின் லட்சணம் என்னவென்று அவர்களுக்குள்ளேயே தெரிந்து வைத்துள்ளார்கள். 

பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி. மற்ற கட்சிகள் ஒன்று திகைத்துள்ளது அல்லது பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பாஜக தமிழகத்தில் முன்னேறி வருகிறது. இதனால் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என எதிர்பார்ப்புகள் எனக்கு உள்ளது" என்றார்.

மேலும் படிக்க | தவழ்ந்து தவழ்ந்து சின்னம்மா காலில் விழுந்து பதவியை பெற்றவர் எடப்பாடி - ஓபிஎஸ்!

விஜய்யின் அரசியல் பிரவேசம்

நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் தங்களுக்கு இலக்கு இல்லை என்று அவர்கள் கூறியிருப்பது குறித்தான கேள்விக்கு ஹெச்.ராஜா பதில் அளித்தார். அதில், "அது பற்றி தற்பொழுது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அது குறித்து விவாதிக்கலாம். 

மேலும் விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் என தெரிகிறது. அதனை வரவேற்கிறேன், எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மத்திய அரசு பற்றியான எதிர்மறை கருத்துக்கள் மக்களிடத்தில் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் வந்து பிரதமர் ஆவார் என்றெல்லாம் மக்கள் கற்பனையும் செய்வதில்லை, அது நடக்காது. 

அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?

தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அதனை விமர்சிக்க வேண்டி இருக்கிறது. அதிமுக ஆளும் கட்சியும் இல்லை, எதிர்க்கட்சியும் இல்லை. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாஜக, எதிர்கட்சி காங்கிரஸ். அந்த காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி என்பதால் பாஜக திமுகவை அதிகமாக விமர்சிக்க வேண்டி இருக்கிறது. அதிமுக அந்த இடத்தில் இல்லை என்பதால் விமர்சனம் கொஞ்சம் கம்மியாக இருக்கலாம்.

1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி ஜெயலலிதாவை பார்த்தார்கள். அப்போது ஜெயலலிதா பாஜகதான் வெல்லும் என கூறினார். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது, சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது எல்லாம் வெறும் கற்பனை.

கமல்ஹாசன் - திமுக கூட்டணி?

கமல்ஹாசன் திமுகவில் சேரலாம் என கூறப்படுவது குறித்தான கேள்விக்கு, "மக்கள் நீதி மய்யம் தலைவர் கட்சி துவங்கும் பொழுது ஊழலுக்கு எதிரானவர் என்றார். தற்போது திமுகவில் தேர்தல் நடப்பதற்குள் இருக்கும் இந்த 60 நாட்களுக்குள்ளேயே அரை டஜன் மந்திரிகள் உள்ளே போனாலும் போகலாம்.

இதன் மூலம் கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கும் போது பேசியதெல்லாம் வெற்று வார்த்தைகள். மேலும் கமலஹாசனுக்கு ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கமல் ஊழலுக்கு எதிரானவர் இல்லை, கமல் ஊழலுக்கு துணை போகிறவர்.

மேலும் படிக்க | கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மநீம கமல்ஹாசன்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News