தேனி மாவட்டம் போடியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வலசை துறை. அங்குள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் முருகன். 48 வயதான அவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த முருகன் தோட்ட காவலாளியாக தோட்டத்திலேயே தங்கி பணியாற்றி வந்தார். அப்போது தன்னுடைய உறவினரான ஜெகதீஸ்வரன் என்பவரையும் அதே தோட்டத்தில் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார். அங்குதான் பிரச்சினை உருவெடுத்தது. வேலை முடிந்ததும் இரவு உறங்க செல்லும்போது இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அப்படி மது அருந்தும் போதெல்லாம் இருவரும் வாக்கு வாதம் ஏற்படும். சம்பவத்தன்று வேலைப்பளு குறித்து மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் அன்று கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போதை வெறியில் இருந்தவர்கள் அங்கிருந்த அரிவாளாலை எடுத்து மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். அதில் முருகனுக்கு பலத்த அரிவாளால் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்திருக்கிறார். சிறுது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக முருகன் இறந்துபோனார். முருகன் இறந்து விட்டதை அறிந்த ஜெகதீஸ்வரன் சடலத்தின் காலை பிடித்து தர தரவென்று இழுத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஓடை தண்ணீரில் போட்டுவிட்டுச் சென்றார்.
மறுநாள் தனது முதலாளியிடம் முருகனைக் காணவில்லை என்று கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தோட்ட முதலாளி, ஜெகதீஸ்வரனின் பேச்சிலும் நடவடிக்கைகளும் சந்தேகமடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனே போடி சரக துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு ஆய்வு செய்ததில் இறந்து கிடந்த முருகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்த பொழுது கொலையுண்ட முருகனும் கொலை செய்த ஜெகதீஸ்வரன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதும் அரிவாளால் வெட்டியதும் கீழே விழுந்த முருகனை காலைப்பிடித்து இழுத்து ஓடைக்கு தள்ளியதும் பதிவாகி இருந்தது. இதன் பின்னர் போலீசார் ஜெகதீஸ்வரனை விசாரித்த பொழுது தான் முருகனின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.கொலை செய்யப்பட்ட முருகனது உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினர் கொலையாளி ஜெகதீஸ்வரன் கைது செய்து வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | காரில் சென்று வழி கேட்பது போல் நடித்து தொடர் செல்போன் கொள்ளை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR