ஜூலை 28 ஆம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

சென்னையில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 23, 2022, 05:26 PM IST
  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
  • 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு.
ஜூலை 28 ஆம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை! title=

வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளையொட்டி ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையிலான நாட்களில் சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு தினசரி 5 இலவச பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த போட்டியின் தொடக்க விழாவானது சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில், தொடக்க விழாவை முன்னிட்டு மேடை அலங்காரம், வளாக வசதிகள் என அனைத்தின் ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும் படிக்க | Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு  பேசுகையில்,

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி நேரு உள்விளையாட்டு அரங்கை இன்று பார்வையிட்டோம். 28-ந்தேதி இங்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்வில் பிரதமர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்கள். 

தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழாக்கள் நடைபெறும். தொடக்க விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். 

நேரு உள்விளையாட்டு அரங்கம் 6ஆயிரம் பேர் அமரும் உள் அரங்கம் ஆகும். 187 நாட்டின் 1500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வர். பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சார வசதி, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தோம். நேரு அரங்கில் 24-ந்தேதிக்கு முன்பாக முன் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடையும். 

தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28-ந் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும். 

மேலும் படிக்க | Mobile Charging: மின்னல் வேகத்தில் மொபைல் சார்ஜ் ஆக 5 டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News