பாரத் கேஸ் ஏஜென்சி பெயரில் ரூ.5.5 கோடி மோசடி

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே சாலையில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சி நடத்தி வரும் வினோதா என்பவர் பாரத் கேஸ் ஏஜென்சி பெயரில் ரூ.5.5 கோடி மோசடி செய்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 25, 2022, 03:01 PM IST
பாரத் கேஸ் ஏஜென்சி பெயரில் ரூ.5.5 கோடி மோசடி title=

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே சாலையில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சி நடத்தி வரும் வினோதா என்பவர் தொடர்ந்து, 28 நபர்களை பார்ட்னராக சேர்த்து கொள்வதாக கூறி ரூ. 5. 5 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளார்.

மேலும், சிலிண்டர் டெபாசிட் தொகையை பொதுமக்களிடம் இருந்து பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். 400 நபர்களிடம் ரீபண்ட் தொகையை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.

மேலும் இந்த மோசடி குறித்து பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஆய்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்த அதிகாரிகள், பழனி பாரத் கேஸ் ஏஜென்சி வினோதாவிற்கு 72 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் காலி சிலிண்டர்களை 2400 நபர்களிடம் 10 நாட்களில் திருப்பித் தருவதாக கூறி அனைத்து வீடுகளில் இருந்தும் காலி சிலிண்டர்கள் எடுத்துச் சென்று ஏமாற்றியுள்ளார்.

மேலும் படிக்க | காஞ்சிபுரம் : பெற்ற மகள்களை துடிதுடிக்க கொலை செய்த கொடூர தந்தை

பாதிக்கப்பட்ட 28 நபர்கள் தங்களை பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி, ஏமாற்றியதாக கூறினர். மொத்தம் ரூ.5.1/2 கோடி ரூபாய் ஏமாற்றிய நிலையில் மோசடி செய்த வினோதா அவரது கணவர் சுரேஷ் மற்றும் தந்தை லட்சுமணன் ஆகியோர் மீது நகர காவல் நிலையத்தில் அவர்கள் அனைவரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க | சென்னையில் 900 பேர் பங்கேற்ற மது விருந்து: அளவுக்கு அதிகமான போதையில் 21 வயது இளைஞர் பலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News